வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போட வாய்ப்பே இல்லை: மும்பை ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்..!!
வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போட வாய்ப்பே இல்லை என்று மும்பை ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தடுப்பூசி மருந்துகள் வைக்கப்பட்டு இருக்கும் பெட்டகங்களை வீடு வீடாக எடுத்துச் செல்வது சிக்கல்களை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். அவற்றில் நெடுந்தொலைவுக்கு எடுத்துச் சென்றால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என வாதிட்டார்.