உஷார்.! தமிழகத்தில் இந்த -5 மாவட்டங்களில்
50 %கொரோனா.!
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு முறைகளை மேற்கொண்டு வருகின்றது. இருந்த போதிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,681 பேர் .
சென்னையில் மட்டும் 3750 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,26,லட்சம் பேர். இவர்களில் 84,361 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதே போல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 18 பேர். இதுவரை தமிழகத்தில் மட்டும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை 13,258 பேர்.
இந்த செய்தியையும் படிங்க….
இதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகம் 5 மாவட்டங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.