கற்கை நன்றே… கற்கை நன்றே! கல்வி சேனலில் பாடங்கள்.!
ஊரடங்கால் கற்றல் தடைபட்டுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கற்றல் திறனை ஆய்வு செய்யும் விதமாகவும், செயல்பாட்டுடன் கூடிய, ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ பயிற்சி கையேடுகளை மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
இணைப்பு பாடப்புத்தகம் இரண்டு தொகுதிகளாக தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் தொகுதியில் தமிழ், ஆங்கிலம் பாடங்களும், இரண்டாம் தொகுதியில் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களும் உள்ளன. கணித பாடம், இரு தொகுதிகளிலும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடமும், 10 நாட்கள் பயிற்சி அளிக்கக்கூடிய வகையில் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.இக்கையேடுகள் அனைத்து மாணவர்களுக்கும் வினியோகிக்கப்பட்ட நிலையில், இதற்கான வீடியோக்கள் கல்வி சேனல் வழியாக நேற்று முதல் ஒளிபரப்பானது. பயிற்சி கையேடுகள் பயன்பாடு மற்றும் பயிற்சி எடுக்கும் வழிமுறைகள் குறித்து, வகுப்பு வாரியாக ஆசிரியர்கள் வீடியோவில் விளக்கமளித்தனர்.
மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே, கற்றனர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறுகையில், ”தொடக்க கல்வி முதல் உயர் படிப்புகள் வரை, முடங்கியுள்ள இந்த சூழலில் இருந்து விடுபட,இணையவழி கற்றலே, இப்போதைக்கு சரியான தீர்வாக இருக்கும்.
இந்த செய்தியையும் படிங்க…
ஆசிரியர்கள் வருகை- ஏப்ரல் 30 வரை உறுதி செய்யப்படும்…!!
ஒவ்வொரு நாளின் முடிவிலும், பயிற்சி கட்டகத்தில் உள்ள மதிப்பீட்டு பகுதியை இலவச நோட்டு புத்தகத்தில் தவறாமல் குறிப்பிட வேண்டும்.இவ்வாறு, அவர்கூறினர்.எந்த வகுப்பு? எந்த நேரம்?கல்வி சேனலில், காலை, 8:00 மணிக்கு ஒன்பதாம் வகுப்புக்கான பயிற்சி ஒளிபரப்பாகிறது. காலை, 8:30 மணிக்கு – எட்டாம் வகுப்பு; காலை, 9:00 மணிக்கு- ஏழாம் வகுப்பு, காலை, 9:30 மணிக்கு – ஆறாம் வகுப்பு; காலை, 10:00 மணிக்கு- ஐந்தாம் வகுப்பு; காலை, 10:30 மணிக்கு- நான்காம் வகுப்பு, 11:00 மணிக்கு – மூன்றாம் வகுப்பு; 11:30 மணிக்கு – இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் ஒளிபரப்பாகிறது. தொடர்ந்து, பிற்பகல், 12:00 முதல் மாலை, 4:30 மணி வரை ஒவ்வொரு வகுப்புக்கும் சுழற்சிமுறையில் வகுப்புகள் நடக்கும்.