கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும்: ஐகோர்ட் அறிவுறுத்தல்..!! - Tamil Crowd (Health Care)

கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும்: ஐகோர்ட் அறிவுறுத்தல்..!!

 கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும்: ஐகோர்ட் அறிவுறுத்தல்..!!

 அதிமுக அலுவலகத்தில் கடந்த ஆண்டு நடந்த முதல்வர் வேட்பாளர் அறிவித்த நிகழ்ச்சியில், கொரோனா விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். அதை அரசு கண்காணிக்கவும் அறிவுறுத்தினர்.

இந்த செய்தியையும் படிங்க…

 உலக அளவில் பாதிப்பில் முதலிடம் தொட்ட இந்தியா.! – அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது.! 

சென்னையில் மட்டுமே பெரும்பாலானோர் முகக்கவசம் அணிகிறார்கள். மற்ற இடங்களில் அவ்வாறு அணிவதில்லை. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும். அவற்றை பின்பற்றுவதில் அனைவருக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது. கொரோனா தடுப்பு விதிகளான முகக்கவசம்,தனிமனித இடைவெளி, முறையாக கைகழுவுதல் ஆகியவற்றை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். அரசும் பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது என்று உத்தரவிட்டு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Leave a Comment