நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைப்பு.!!
தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர் .
பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை உயரத் தொடங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வந்த நிலையில், தங்கத்தின் விலை தற்போது ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது.
கடந்த மாதங்களில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4,502 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 36,016 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4,861 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 38,888 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை 1 கிலோக்கு 600 குறைந்து, ஒரு கிராம் ரூ. 74.60 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.74,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.