ஓராண்டாக கற்பித்தல் இல்லை - ஆசிரியர்களுக்கு மேலும் சலுகை- தினமலர்..!! - Tamil Crowd (Health Care)

ஓராண்டாக கற்பித்தல் இல்லை – ஆசிரியர்களுக்கு மேலும் சலுகை- தினமலர்..!!

 ஓராண்டாக கற்பித்தல் இல்லை – ஆசிரியர்களுக்கு மேலும் சலுகை- தினமலர்..!!

ஓராண்டாக பாடம் எடுக்காததால், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பல பள்ளிகளில், ஆசிரியர்கள் வாரம் இரண்டு நாட்கள் வந்தால் போதும் என, அறிவுறுத்தப் பட்டு உள்ளது.தமிழகத்தில், கொரோனா பரவலால், ஓர் ஆண்டாக பள்ளிகள் முழுமையாக இயங்கவில்லை. ஒன்பது முதல் பிளஸ் 1 வரை ஒரு மாதமும், பிளஸ் 2வுக்கு மூன்று மாதங்களும் பள்ளிகள் செயல்பட்டுள்ளன.

இந்நிலையில், எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டு முழுதும், ஒரு நாள் கூட பாடம் நடத்தப்படவில்லை. அனைவரும், ‘ஆல் பாஸ்’ செய்யப்படும் நிலை உள்ளது.அவர்களுக்கு எந்த வகையிலும் கற்பித்தல் பணியை மேற்கொள்ள, தொடக்கக் கல்வி துறை முயற்சி எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

கற்கை நன்றே… கற்கை நன்றே! கல்வி சேனலில் பாடங்கள்.!

மேலும், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது குறித்தும், அவர்கள் மாணவர்களின் கற்பித்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்தும், உரிய வழிகாட்டல் வழங்கப்படவில்லை. பெரும்பாலான நாட்களில் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாத சம்பளம் பெறுவதற்காக, வருகைப் பதிவில் கையெழுத்திட்டு மட்டும் சென்றுள்ளனர்.

இந்நிலையில், மேலும் சலுகை வழங்கும் விதமாக, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் பள்ளிக்கு வந்து சென்றால் போதும் என, பல மாவட்டங்களில் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து, பல ஆசிரியர்கள், வாரம் இரண்டு நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்து, வருகைப் பதிவில் கையெழுத்திட்டு செல்கின்றனர். பலர் சொந்தமாக தொழில் செய்ய துவங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே நிலை நீடித்தால், அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் எட்டாம் வகுப்பு முடிக்கும் போது, தமிழ் எழுத்துக்கள் கூட தெரியாமல் தேர்ச்சி பெறும் நிலையே ஏற்படும்.அதற்கு முன், தொடக்க கல்வி துறை விழித்துக் கொண்டு, கற்பித்தல் தொடர்பான திட்டங்களை வகுக்க வேண்டும் என, பெற்றோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

3 thoughts on “ஓராண்டாக கற்பித்தல் இல்லை – ஆசிரியர்களுக்கு மேலும் சலுகை- தினமலர்..!!”

  1. Your paper has been constantly writing I logical things about teachers Pls stop it. Teachers are the ones who are caretakers of rural kids they are not sitting in AC rooms like your writers and minting money and gaining popularity by writing I'll things…

    Reply
  2. Teachers blame panadinga. Parent family source ku pasangala daily wages ku anupuranga. Avangla kelunga. Inda opportunity semaiya use panarnga. Dhinamalar news?

    Reply
  3. This is a bad way of writing about school teachers… Stop writing about teachers… Ofcouse teachers deal with students and when students cannot come to school due to pandemic teachers too need not sit in empty classrooms..
    Why are you so biased in your opinion… Teachers are humans dealing with valuable human beings… Stop writing so endlessly about teachers and their lack of active class during this pandemic…

    Reply

Leave a Comment