காலை 8 மணிக்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கும்-சாகு திட்டவட்டம்.. !! - Tamil Crowd (Health Care)

காலை 8 மணிக்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கும்-சாகு திட்டவட்டம்.. !!

 காலை 8 மணிக்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கும்-சாகு திட்டவட்டம்.. !!

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. ஆனால், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 29ஆம் தேதி 8ஆம் மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகளும் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த செய்தியையும் படிங்க….

 DSE – ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் பெற்ற கடன்தொகையை (Through Thrift Society) திரும்ப செலுத்துவது சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்..!!

இந்த நிலையில் கொரோனா காரணமாக வாக்கு எண்ணிக்கை நேரம் மாறலாம் என தகவல் வெளியானது. எனினும் காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு கூறியிருந்தார். இந்த நிலையில், காலை 08.00 மணிக்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என சாகு திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், காலை 8.30 மணிக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். சிறிய அறையாக இருந்தால், ஒரு அறைக்கு ஏழு மேஜைகள் என இரு அறைகளில் வாக்கு எண்ண ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கையை 14 மேஜைகளில் இருந்து குறைப்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை.

இந்த செய்தியையும் படிங்க….

உறுதி செய்யப்படும் -ஆசிரியர்கள் வருகை..!! | 

முகவர்கள், வேட்பாளர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்வது குறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 72 மணி நேரத்துக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதால் விரைவில் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறையுடன் ஆலோசனை செய்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment