ஆன்லைனில்- 12ம் வகுப்பு பொதுத்தேர்வா..??
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதையடுத்து இரவு 10 மணி முதல் மாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு வரும் 30ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கும் அமல்படுத்தப்படுகிறது. இந்த சூழலில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் செய்முறை தேர்வுகள் வழக்கம்போல் நடைபெற்றன.
இந்த செய்தியையும் படிங்க….
12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 2500 காலிப்பணியிடங்கள்..!!|
இந்நிலையில் புதுச்சேரியில் செய்முறை தேர்வு நடந்துமுடிந்த நிலையில் , மறு உத்தரவு வரும் வரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை எந்த நோக்கத்துக்காகவும் பள்ளிகளுக்கு வர அறிவுறுத்தக் கூடாது என்றும், திருத்தப்பட்ட தேர்வு நடைபெறும் நாள் குறித்த அறிவிப்பு, தமிழக கல்வி வாரிய இயக்குநரால் தேர்வு நடைபெறும் 15 நாள்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்படும் என்றும் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.