பீதியை கிளம்பும் கொரோனா..!! ஒரே நாளில் 14,000-ஐ நெருங்கியது.. குழந்தைகளும் அதிகம் பாதிக்கும் அபாயம்.. !! - Tamil Crowd (Health Care)

பீதியை கிளம்பும் கொரோனா..!! ஒரே நாளில் 14,000-ஐ நெருங்கியது.. குழந்தைகளும் அதிகம் பாதிக்கும் அபாயம்.. !!

 பீதியை கிளம்பும் கொரோனா..!! ஒரே நாளில் 14,000-ஐ நெருங்கியது.. குழந்தைகளும் அதிகம் பாதிக்கும் அபாயம்.. !!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உற்சமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணிநேரத்தில்ல புதிய உச்சமாக தமிழகத்தில் 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் 13,732 நபர்களும், வெளிமாநிலங்களில் வந்த 44 பேரும் அடங்குவர்.

கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி 128 சிறார்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 12 வயதுக்குட்பட்ட 514 சிறார்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது . குழந்தைகளுக்கும் தொற்று அதிகரித்து வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க….

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியில் சிறந்தது எது?: மருத்துவர்கள் விளக்கம்..!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 95,048 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனை, வீடுகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 95,048 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்று ஒரே நாளில் 8,078 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 43 ஆயிரத்து 44 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 78 நபர்கள் உயிரிழந்தனர். இதில் சென்னையில் அதிகபட்சமாக 37 பேர் இறந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 95,048 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Comment