இனி SBI savings account open- ஸ்மார்ட்போன் போதும்..!! - Tamil Crowd (Health Care)

இனி SBI savings account open- ஸ்மார்ட்போன் போதும்..!!

 இனி SBI savings account open- ஸ்மார்ட்போன் போதும்..!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் அனைத்து வங்கி சேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் தளம்தான் YONO என்னும் மொபைல் செயலி. ஆண்ட்ராய்டு மொபைல்கள் மற்றும் ஐபோன் போன்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ(SBI) YONO மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

 இந்த செய்தியையும் படிங்க….

வங்கி கிளைகளுக்கு சென்று கணக்கு தொடங்குவதை தவிர்க்கலாம். ஒரு ஸ்மார்ட் போன் மூலம் எளிமையாக சேமிப்பு கணக்கை open செய்ய முடியும். SBI வங்கியின் YONO App ஆனது இந்த வசதியை வழங்குகிறது. இந்த செயலியில் வங்கின் பலதரப்பட்ட சேவைகளை பெற முடியும். பிற வங்கிக் கணக்குகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்யலாம். 

வீட்டுக்கடன், கல்விக்கடன், வாகனக்கடன், கிரெடிட் கார்டு, காப்பீடு திட்டங்கள், போன்றவற்றை எளிதாகப் பெற இயலும். அதுமட்டுமல்லாது நிரந்தர வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி கணக்குகளைத் தொடங்கி முதலீடு செய்யலாம். ரயில் டிக்கெட் புக் செய்யும் வசதி உள்ளிட்ட பல வசதிகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் account statements யை email வழியாக பெறலாம்.

State Bank of India (SBI) வங்கியில் யோனோ செயலி மூலம் Savings Account-யை திறப்பதற்கான செயல்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

•முதலில் ஸ்மார்ட்போனில் YONO appஐ டவுன்லோடு செய்யவும்.

•YONO செயலியை Open செய்து New to SBI என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

•பிறகு Insta Plus Savings Account என்பதை கிளிக் செய்யவும்

•தொடர்ந்து ஆதார் விவரங்களை கொடுத்த பின் சரிபார்ப்பு முடிந்தவுடன் தனிப்பட்ட விவரங்களை •உள்ளீடு செய்து KYC செயல்முறையை முடிக்க வீடியோ அழைப்பை schedule செய்ய வேண்டும். வீடியோ •KYC வெற்றிகரமாக முடிந்ததும், கணக்கு தானாகவே திறக்கப்படும். எனவே, வாடிக்கையாளர்கள் வங்கி •கிளைக்குச் செல்லாமல் புதிய எஸ்பிஐ (SBI)சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம்.

இந்த செய்தியையும் படிங்க….

 காற்றில் கரோனா வைரஸை அழிக்கும் கருவி: பாரடே ஓசோன் நிறுவனம் விற்பனை..!!

ஆன்லைனில் சேமிப்பு வங்கி கணக்கு திறக்கும் வசதியை தொடங்குவது தற்போதைய தொற்றுநோய் காலத்தில் மிகவும் அவசியமானது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு, நிதி பாதுகாப்பு மற்றும் செலவு-செயல்திறனை உறுதிப்படுத்த இது ஒரு படி மேலே உள்ளது. இந்த முயற்சி மொபைல் வங்கிக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கும் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி தேவைகளுக்கு டிஜிட்டல் தளத்தை பயன்படுத்துவது அதிகரிக்கும்.

Leave a Comment