மே இறுதியில் கொரோனா வியக்கத்தக்க வகையில் குறையும்: ஐஐடி விஞ்ஞானிகள் கணிப்பு..!! - Tamil Crowd (Health Care)

மே இறுதியில் கொரோனா வியக்கத்தக்க வகையில் குறையும்: ஐஐடி விஞ்ஞானிகள் கணிப்பு..!!

 மே இறுதியில் கொரோனா வியக்கத்தக்க வகையில் குறையும்: ஐஐடி விஞ்ஞானிகள் கணிப்பு..!!

இந்தியாவில் கொரோனா 2 ஆவது அலை வரும் மே மாத இறுதியில் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் குறைந்துவிடும் என ஐஐடி விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

ஹைதராபாத் மற்றும் கான்பூர் ஐஐடிக்களை சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்தியாவில் தற்போது 24 லட்சம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா சிகிச்சையிலிருக்கும் நோயாளிகள் எண்ணிக்கை மே மாதம் 11 முதல் 15ஆம் தேதிக்குள் 33 லட்சம் முதல் 35 லட்சத்தை தொட வாய்ப்புள்ளதாக ஹைதராபாத் மற்றும் கான்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

கொரோனா தற்போது அதிவேகமாக உயரும் நிலையில் மே மத்தியில் அது உச்சத்தை தொட்டு ஆச்சரியப்படத்தக்க வேகத்தில் சரிந்து மே இறுதியில் வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாக கான்பூர் ஐஐடி பேராசிரியர் மணீந்தர் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க….

 IFHRMS – ESR தொடர்பான பணிகளை எதிர்வரும் மே மாதம் 10 ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு..!! 

கொரோனா உச்சத்தை கணிக்க ஏற்கனவே பின்பற்றப்பட்டு வரும் கணிதவியல் கோட்பாடுகளில் உள்ள சில குறைபாடுகளை களைந்து புதிய கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக ஏப்ரல் மத்தியில் கொரோனா உச்சத்தை தொட்டு பின்னர் குறையத் தொடங்கும் என கணிதவியல் கோட்பாடுகள் படி கணிப்புகள் வெளியாகியிருந்தன. ஆனால் அவை பொய்த்து போய் இன்னும் புதிய தொற்றுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment