இன்று முழு ஊரடங்கு: என்னென்ன இயங்கும்..?? என்னென்ன இயங்காது..??
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக ஞாயிறு மட்டும் முழு ஊரடங்கும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்தது.
அது மட்டும் இன்றி நேற்று கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்றைய முழு ஊரடங்கு தினத்தில் என்னென்ன கட்டுப்பாடுகள்? மற்றும் என்னென்ன இயங்கும்? என்னென்ன இயங்காது? என்பதை தற்போது பார்ப்போம்
- இன்று, இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், டாஸ்மாக் மதுக்கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி இல்லை.
- இன்று, உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.
- இன்று, பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள் மற்றும் எரிபொருள் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு அனுமதி
- ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர், தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி
- திருமண என்றால் 100 நபர்களுக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதி