இன்று மகாவீர் ஜெயந்தி: ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து..!!
மகாவீர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழக மக்களுக்கும், குறிப்பாக சமண சமயத்தை சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மகாவீரின் உன்னத போதனைகளான அகிம்சை, சத்தியம் மற்றும் உலகளாவிய இரக்கம் ஆகியவை நீதி மற்றும் நேர்மையின் பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டின. ஆன்மாவின் குரலை மதிக்க கற்றுக்கொடுத்தவர் மகாவீர்.
ஆக்சிஜன் தேவைக்கு அவசர எண் 104..! தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு.!
கொரோனா தொடர்பான அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி விழாவினை கொண்டாடுமாறு தமிழக மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். வீட்டில் தங்கி, பாதுகாப்பாக இருங்கள்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘சமண சமயத்தின் 24ஆவது தீர்த்தங்கரரான பகவான் மகாவீரின் பிறந்த தினத்தை கொண்டாடி மகிழும் சமண சமய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ‘மகாவீர் ஜெயந்தி’ நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அறத்தையும், அகிம்சையையும் இரு கண்களாக போற்றிய பகவான் மகாவீரின் பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடும் சமண சமய பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ‘மகாவீர் ஜெயந்தி’ நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.