FD -ல போடுறதுதான் லாபமா.? இந்த SB அக்கவுன்ட் வட்டியைப் பாருங்க..!!
மத்திய ரிசர்வ் வங்கி(RBI) சமீபத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வீதத்தை குறைத்துள்ள நிலையில், பிக்ஸட் டெபாசிட் செய்தவர்களுக்கான வட்டி வீதத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் வங்கிகள் உள்ளன. ரெப்போ வீதம் குறைக்கப்பட்ட நிலையில், சமீப காலங்களில் வங்களின் டெபாசிட் திட்டங்களின் கவர்ச்சியை பாதித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க….
Bank Holiday: மே மாதத்தில் வங்கிகளுக்கு- எவ்வளவு நாள் விடுமுறை..??
முன்னணி பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் இப்போது வைப்புத்தொகையின் காலத்தைப் பொறுத்து பொது மக்களுக்கு தங்கள் நிலையான வைப்புகளில் 2.5% முதல் 5.5% வரை வட்டி விகிதத்தை வழங்கி வருகின்றன. மேலும், மூத்த குடிமக்களுக்கு, அவர்களின் பிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 6 சதவீதமாக இருந்து வருகிறது.
சில சிறிய தனியார் துறை வங்கிகள் மற்றும் சிறு நிதி நிறுவனங்கள், ஒரு குறிப்பிட்ட அளவு சராசரி இருப்பை சேமிப்புக் கணக்கில் பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 3 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை வட்டியை வழங்கி வருகின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை பிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வதை விட, சேமிப்பு வங்கி கணக்கில் செலுத்துவதன் மூலம் அதிக வட்டியை சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது.
நிலையான வைப்புத்தொகை மற்றும் சேமிப்புக் கணக்கிலிருந்து பெறப்பட்ட வட்டித் தொகை வாடிக்கையாளர்களின் வரிச்சட்டத்திம் படி, வரி விதிக்கப்படும். இருப்பினும், பிரிவு 80 டி.டி.ஏ படி, சேமிப்புக் கணக்கிலிருந்து பெறப்பட்ட வட்டி வருமானத்தில் ரூ .10,000 குறைப்பு வழங்கப்படுகிறது.
எனவே ஒரு சிறிய சேமிப்பு வங்கி அல்லது தனியார் துறை வங்கியின் சேமிப்புக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை, ஒரு பெரிய பொதுத்துறை நிறுவனம் மற்றும் தனியார் துறை வங்கியில் நிலையான வைப்புத்தொகையை விட அதிக வரிக்கு பிந்தைய வட்டியை ஈட்டி தரக் கூடும்.
இந்த செய்தியையும் படிங்க….
புதிய அறிகுறிகளுடன் கொரோனா:அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை..!!
தனியார் வங்கியான ஐடிஎஃப்சி(HDFC), ஒரு கோடிக்கும் குறைவான சேமிப்பு கணக்கு முதலீடுகளுக்கு 6 சதவீதம் வட்டியையும், ஒரு கோடி முதல் 5 கோடி வரையிலான சேமிப்புகளுக்கு 5 சதவீத வட்டியினையும், 5 முதல் 10 கோடி ரூபாய் வரையிலான சேமிப்புகளுக்கு 4 சதவீதம் வரை வட்டியை வழங்குகிறது.
அதேபோல, மற்றுமொரு தனியார் வங்கியான இண்டஸிண்ட் வங்கி, ஒரு லட்சத்துக்கும் குறைவான சேமிப்புகளுக்கு 4 சதவீத வட்டியையும், 10 லட்சம் வரையிலான சேமிப்பு முதலீடுகளுக்கு 5 சதவீத வட்டியையும் வழங்கி வருகிறது.