இனி இந்த கிரெடிட் கார்டுகளையெல்லாம் வாங்க முடியாது..!!- ஆர்பிஐ (RBI)செக்..!!
பொருளாதார நெருக்கடியால் தற்போதைய காலக்கட்டத்தில் உத்தரவாதமான வருமானம் உள்ளவர்களும் செலவுகளை திட்டமிட்டு செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. கொரோனா பலரின் வேலையை உத்தரவாதமில்லாமல் ஆக்கிவிட்டது.
தனிநபர் நிதி நிர்வாகத்தில் நன்கு திறமையானவர்கள்கூட, கடந்த ஒரு வருடத்தில் கொரோனாவால் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் என வாங்கியவர்கள் அவற்றை திருப்பி செலுத்த திணறுவதாக சொல்கின்றனர். இதனை ஈடுகட்டவே பலர் கிரெடிட் கார்டுகளை நாடுவதுண்டு.
இந்த செய்தியையும் படிங்க….
இந்நிலையில் சர்வதேச கிரெடிட் கார்டு நிறுவனங்களான, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், டைனர்ஸ் கிளப் ஆகியவை, மே1 ஆம் தேதி முதல், புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு, ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
தரவுகள் சேமிப்பில் விதிமுறைகளை மீறியதற்காக, இந்த தடையை விதிப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவால், தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.