புதுச்சேரியில் -கடுமையாகும் கட்டுப்பாடுகள்..!!
கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
- அதன்படி, வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொது அரங்குகள், அழகு நிலையங்கள், சலூன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- உரிய வழிமுறைகளை பின்பற்றி காய்கறி கடைகள் வழக்கம்போல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- திருமண விழாக்களில் 50 நபர்களும் இறுதிச்சடங்குகளில் 25 நபர்களும் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
- உணவு விடுதிகள், தேநீர் கடைகளில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மக்கள் நின்று கொண்ட பயணம் செய்ய அனுமதி இல்லை.
- கார் மற்றும் ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர 2 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- கோவில்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.