தங்கம், வெள்ளி- இன்றைய விலை நிலவரம் என்ன..??
தங்கத்தின் விலையில் சில இடங்களில் இன்று ஏற்பட்ட லேசான சரிவு தங்கம் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு சிறிது ஆறுதலை அளித்துள்ளது. ஏற்கனவே திருமண சீசனான இந்த நேரத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையும் தீவிரமாக இருப்பதால், மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
தேசிய அளவில் 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 4,493 ரூபாயாக உள்ளது. இது முந்தைய தினம் 4,494 ரூபாயாக இருந்தது. 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து 44,930 ரூபாயாக உள்ளது. இது முந்தைய அமர்வில் 44,940 ரூபாயாக இருந்தது.
இந்த செய்தியையும் படிங்க….
18-45 வயதுக்கு உட்பட்டவர்கள் நேரடியாக சென்றால்- தடுப்பூசி கிடைக்காது: ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்..!!
24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலையும் 10 ரூபாய் குறைந்து 45,930 ரூபாயாக உள்ளது. இதே அளவு 24 காரட் தங்கம் நேற்று 45,940 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளியின் விலையிலும் லேசான வீழ்ச்சி காணப்பட்டது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில், அந்தந்த நகரங்களின் வரி வகைகளுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் மாற்றங்கள் இருக்கும். மேலும், செய்கூலி, சேதாரத்தைப் பொறுத்து, கடைக்கு கடை விலை மாறுபடுவதுண்டு.
இந்தியாவின் முக்கிய நகரங்களின் இன்றைய தங்க விலை நிலவரத்தைக் காணலாம்:
சென்னை: சென்னையில் இன்று 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (Gold) விலை ரூ.4,482 ஆக உள்ளது. நேற்று இதன் விலை 4,477 ரூபாயாக இருந்தது. 22 காரட் 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 35,856 ஆக உள்ளது. இது நேற்று 35,816 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
24 காரட் தூய தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 4,841 ரூபாயாக உள்ளது. இது நேற்று ரூ.4,836-க்கு விற்பனையானது.
டெல்லி: தேசிய தலைநகரில் 22 காரட் தங்கத்தின் விலை (Gold Price) 10 கிராமுக்கு ரூ .46,230 ஆக உள்ளது. 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ .50,450 ஆக உள்ளது.
கொல்கத்தா: இங்கு 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ .47,420 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ .49,690 ஆகவும் உள்ளது.
மும்பை: மும்பையில் 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ .44,930 ஆக உள்ளது. அதே நேரத்தில் 24 காரட் தங்கத்தின் விலை ரூ .45,930 ஆக உள்ளது.
சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை திங்களன்று அதிகரித்தது. ஸ்பாட் தங்கம் 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது ஒரு அவுன்சுக்கு 1,779.36 அமெரிக்க டாலராக இருந்தது. அமெரிக்க கோல்ட் ஃப்யூசர்ஸ் 0.1 சதவீதம் அதிகரித்து, ஒரு அவுன்சுக்கு 1,780.10 அமெரிக்க டாலராக உள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
முந்தைய நாளின் வர்த்தகத்தில் 10 கிராமுக்கு ரூ.688 ஆக விற்பனையான வெள்ளி இன்று ரூ.687 ஆக விற்பனையாகிறது.
மெட்ரோ நகரங்களில் வெள்ளி விலை
டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் வெள்ளியின் (Silver) விலை ஒரு கிலோகிராமுக்கு 68,700 ரூபாயாக உள்ளது. அதேசமயம், சென்னை மற்றும் ஹைதராபாத்தில் 1 கிலோகிராம் வெள்ளியின் விலை ரூ .74,000 ஆக உள்ளது.