ஓட்டு எண்ணும் பணி- கணினி மூலம் ஒதுக்கீடு..!!
ஓட்டு எண்ணும் பணிகள் மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 6ம் தேதி நடந்தது. வரும் 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.அதனையொட்டி, தொகுதிக்கு 14 மேஜைகள் வீதம் 9 சட்டசபை தொகுதிகளுக்கு மொத்தம் 126 மேஜைகள் அமைக்கப்பட்டு 218 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
இந்த செய்தியையும் படிங்க….
தடுப்பூசிக்கான வலைதள பதிவில்- மருந்தின் வகை, கட்டண விவரங்கள்..!!
ஒவ்வொரு தொகுதிக்கும், 17 கண்காணிப்பாளர்கள், 17 உதவியாளர்கள் மற்றும் 17 நுண் பார்வையாளர்கள் என 9 தொகுதிகளுக்கும் 153 கண்காணிப்பாளர்கள், 153 உதவியாளர்கள், 153 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., அருண் சத்யா, தாசில்தார் பாலமுருகன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.