“எட்டு மாநிலங்கள் இருக்கும்போது தமிழகத்தை மட்டும் குறிவைப்பது – இதற்காகத்தானா?”
முதல்வர் தலைமைமையில் இன்று (26.04.2021) நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், 8 கட்சிகள் மட்டுமே கலந்துகொண்டதால், எட்டுக் கட்சிக் கூட்டத்தில் என்று சொல்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
எட்டுக் கட்சிக் கூட்டத்தில் கோவிட் தொற்று ஆக்சிஜன் தேவைக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி அலகை நான்கு மாதங்களுக்கு இயங்க அனுமதிப்பது என்றும், நோய்த் தொற்று தேவைக்கேற்ப அதன் காலத்தை நீட்டிப்பது என்றும் எடுக்கப்பட்டுள்ள முடிவு அதிர்ச்சியளிக்கிறது.
இந்த செய்தியையும் படிங்க….
தடுப்பூசிக்கான வலைதள பதிவில்- மருந்தின் வகை, கட்டண விவரங்கள்..!!
இந்திய அரசின் பி.எச்.இ.எல். தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு மாற்று நிறுவனங்களின் வழியாக தமிழ்நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கும்போது, ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிப்பது தீய உள்நோக்கம் கொண்டதாகும் என்கிறார் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் அமைந்துள்ள ஆக்சிஜன் தயாரிப்பு அலகுதான் தேவை என்றால், உடனடியாக அவசர சட்டம் நிறைவேற்றி தமிழ்நாடு அரசு அந்த ஆலையைக் கையகப்படுத்தி, இதை செய்திருக்க முடியும். மாறாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் குழுவினர் கண்காணிப்பில் வேதாந்தா நிறுவனமே மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கலாம் என அனுமதிப்பது நாளைக்கு நிரந்தரமாக அந்த ஆலையைத் திறந்துவைக்க வாய்ப்பு ஏற்படுத்தும்.
ஒருவேளை, ஸ்டெர்லைட்டிலுள்ள பொறியாளர்கள்தான் இதை இயக்கத் தேவை என்றால், தமிழ்நாடு அரசே தனது பொறுப்பில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும்போது, அந்த நாட்களுக்கு அந்த குறிப்பிட்ட வல்லுநர்களை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த வழிகள் எதையும் கருதிப் பார்க்காமல், வேதாந்தாவின் நிர்வாகத்திலேயே ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் அலகை இயக்குவது, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான முன்னோட்டம் என ஐயப்பட இடமிருக்கிறது என்கிறார் வெங்கட்ராமன்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய எட்டுக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக் கட்சித் தலைவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்று கூறிய கருத்தை கூட ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை.
மாறாக, தி.மு.க. பேராளர் கனிமொழி, அனில் அகர்வாலின் வேதாந்தாவின் பொறுப்பில் ஸ்டெர்லைட் ஆலையை அப்படியே வைத்துக் கொண்டு, ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் மின்சாரம் தரலாம் என்று கூறிய ஆலோசனை அரசாலும் ஏற்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னால், ஸ்டெர்லைட் ஆலையை இயங்க வைக்கும் உள்நோக்கம் இருக்கிறதா என்ற ஐயம் எழுகிறது என்று சொல்லும் வெங்கட்ராமன்,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைப் போலவே, இதே வேதாந்தா குழுவினருக்குச் சொந்தமான ஆலைகள்
- இராஜஸ்தான் மற்றும்
- உத்தரகாண்ட் (Hindustan Zinc Limited – HZL),
- சத்தீஸ்கர் மற்றும்
- ஒடிசா (Bharat Aluminium Company – BALCO),
- அரியானா (Cairn Oil & Gas),
- ஜார்கண்ட் (ESL Steel Limited),
- கோவா மற்றும்
- கர்நாடகா (Sesa Goa Iron Ore)
- —–
இந்த செய்தியையும் படிங்க….
ஸ்டெர்லைட் ஆக்சிஜனை முழுவதும் மருத்துவப் பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாது – தமிழக அரசு..!!
இந்த உருக்கு ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்திக்கான வாய்ப்பு இருக்கிறபோது தமிழ்நாட்டின் ஸ்டெர்லைட் ஆலையில் மட்டும் கவனம் செலுத்துவது ஆக்சிஜன் தயாரிக்கிற நோக்கத்தோடா? தமிழர்களை பலிகொடுத்து அனில் அகர்வாலுக்கு உதவி செய்யும் உள்நோக்கத்தோடா என்ற ஐயம் வலுவாக எழுகிறது என்கிறார்