அட்சய திருதியை: நகை வாங்குபவரா நீங்கள்- உங்களுக்காக..!!
அட்சயம் என்றால், ‘வளருதல்’ என்று பொருள். சித்திரை மாதம், வளர்பிறையில் வரும் திரிதியை திதி, ‘அட்சய திரிதியை’ என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. பிரம்ம தேவர் தனது சிருஷ்டித் தொழிலை ஆரம்பித்தது இந்த நாளில்தான் என்கின்றன புராணங்கள். மிகவும் புண்ணியமான இந்தக் காலத்தில் புண்ணிய நீராடுவது, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது, தானியங்கள் வாங்குவது, தானம் அளிப்பது என்று பல்வேறு நற்காரியங்களைச் செய்ய உகந்த நாள்.
இந்த செய்தியையும் படிங்க…
மே 15 வரை ரத்து- சற்றுமுன் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
அதிலும் அட்சய திருதியை அன்று நாம் வாங்கும் அனைத்தும் பல்கிப் பெருகும் என்பது நம்பிக்கை. அதனால்தான் செல்வங்களில் மகாலட்சுமியின் அம்சமாகப் போற்றப்படும் பொன்னை அனைவரும் வாங்க விரும்புகிறார்கள். இந்த நாளில் பொன் சிறிதேனும் வாங்கினால் அது பல மடங்காகப் பெருகும் என்பது நம்பிக்கை.