புதிய ரேசன் கார்டு விரைவில் வாங்க(15-20 நாட்களுக்குள்)-தேவையான ஆவணங்கள், எளிய வழிமுறைகள்..!! - Tamil Crowd (Health Care)

புதிய ரேசன் கார்டு விரைவில் வாங்க(15-20 நாட்களுக்குள்)-தேவையான ஆவணங்கள், எளிய வழிமுறைகள்..!!

 புதிய ரேசன் கார்டு விரைவில் வாங்க(15-20 நாட்களுக்குள்)-


தேவையான ஆவணங்கள், எளிய வழிமுறைகள்..!!

புதிய ரேசன் கார்டு விரைவில் வாங்க:

அனைத்து இந்திய குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக ரேஷன் கார்டு இருக்கிறது. தமிழகத்தில் ரேசன் கார்டு வாங்க விண்ணப்பிப்பவர் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பிப்பவரின் பெயர் வேறு எந்த ரேசன் கார்டிலும் இருக்க கூடாது.

தற்போது ரேஷன் அட்டை டிஜிட்டல் கார்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்தின் வருவாயைப் பொறுத்து  5 வகையான தரநிலை ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. 

  1. PHH-Priority household
  2. PHH-AAY-Priority house hold-Antyodaya Anna Yojana
  3. NPHH-Non Priority House Hold
  4. NPHH-S, 
  5. NPHH-NC 

இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் துறை சரிபார்ப்பு, ஆவணங்கள் சரிபார்ப்பு, தாலுகா அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இருப்பினும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதால் , எந்த ஒரு அலைச்சலும் இல்லாமல் 15-20 நாட்களில் ரேஷன் அட்டைகளை பெற்றுக் கொள்ளும் வசதியை வழங்குகிறது.

தேவையான ஆவணங்கள்:

அதன்படி புதிய ரேஷன் அட்டைகளை பெற விரும்புபவர்கள்

  • பழைய ரேஷன் கார்டுகளில் உள்ள பெயரை நீக்கம் செய்ய வேண்டும். 
  • இதற்கு பயனரின் திருமண பதிவுச் சான்று கட்டாயம். 
  • அதேபோல் ரேஷன் கார்டில் குழந்தைகளின் பெயரை சேர்க்க வேண்டுமென்றால் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகும். அதேபோல் புதிய ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக சேர்க்க உள்ளவர்களின் புகைப்படத்தை 5 MB அளவிற்கு மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். 
  • அதன் பிறகு வீட்டு வரி, வாடகை ஒப்பந்த பத்திரம், கேஸ் இணைப்பு, வாடகை ரசீது உள்ளிட்ட இணைப்பு தகவல்கள் தேவைப்படும்.

எளிய வழிமுறைகள்:

* முதலில் https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் Log in செய்து கொள்ளவும்.

* அதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதை ஓபன் செய்து மின்னணு அட்டைக்கு விண்ணப்பிக்கும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

* அதனுடைய அடுத்த பக்கத்தில் புதிய ரேஷன் அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

* இதையடுத்து “Name of family head” என்ற பெட்டியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயரை பதிவிடவும். பின்னர் முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், மொபைல் எண், அஞ்சல் குறியீடு, இமெயில் ஐடி உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும். அதனை தொடர்ந்து புகைப்படத்தை பதிவிடவும்.

* பிறகு தேவையான அட்டையை கிளிக் செய்து தேர்வு செய்து கொள்ளலாம்.

* இருப்பிட சான்றிதழில் டெலிபோன் பில், கேஸ் பில், தண்ணீர் பில் 1 MB அளவில் ஏதேனும் ஒரு ஆவணத்தை பதிவேற்றம் செய்யலாம்.

* அடுத்து உறுப்பினர் சேர்க்கை என்பதை கிளிக் செய்து அதில் குடும்ப தலைவர் பெயரை பதிவு செய்தவுடன், நீங்கள் கொடுத்த மற்ற விவரங்கள் தோன்றும்.

* அடுத்து ஸ்கேன் கொடுத்து ஆதார் தகவல்களை அப்லோட் செய்யவும். அதன்பிறகு உறுப்பினர் சேர்க்கை SAVE என்ற ஆப்சனை தேர்வு செய்யவும். தொடர்ந்து சமையல் எரிவாயு இணைப்பில் பெயர், விவரங்கள், சிலிண்டர் உள்ளிட்டவற்றை பதிவிடவும். பிறகு நீங்கள் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து உறுதி செய்து கொள்ளவும்.

* இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு குறிப்பு எண் அனுப்பப்படும். அதனை பயன்படுத்தி ஈசியாக ரேஷன் அட்டையின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.

Leave a Comment