இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா இரண்டாவது அலை-உலகமே பயப்படுவது ஏன்..?? - Tamil Crowd (Health Care)

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா இரண்டாவது அலை-உலகமே பயப்படுவது ஏன்..??

 இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா இரண்டாவது அலை-உலகமே பயப்படுவது ஏன்..??

இந்தியா தற்போது 2வது அலை கொரோனா வைரஸ் பரவலில் சிக்கித் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. நாள்தோறும் பதிவாகும் கொரோனா பாதிப்புகள் முந்தைய நாளை விஞ்சிய புதிய சாதனைகளாக இருக்கின்றன. இது மக்களிடையே மற்றும் மருத்துவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த செய்தியையும் படிங்க….

 அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை உயர்த்தியது ஏன்.? விளக்கம் வேணும்- தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

130 கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மரபு மாற்றம் அடைந்த டபுள் மியூட்டன்ட் (‘Double Mutant) கொரோனா வைரஸ் எதிர்ப்பார்பதற்கு மேலாக வேகமாக பரவி வருகிறது. கட்டுப்படுத்த வழி தெரியாமல் அரசு இயந்திரங்களும் தவித்து வருகின்றன.

குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்களில் கொரோனா பாதிப்பினால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஒரே பெட்டில் 3 நோயாளிகளை அனுமதிக்க வேண்டிய அவல நிலை அரங்கேறி வருகிறது. உயிர்க்காக்கும் கருவிகள் போதிய அளவு இல்லாததால் திரும்பிய பக்கமெல்லாம் மக்களின் மரண ஓலங்களை கேட்க முடிகிறது. 

குடிநீருக்கு வரிசைக் கட்டி நின்றிருந்த மக்கள், தற்போது தங்களின் அன்பிற்குரியவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஆக்சிஸிஜன் சிலிண்டர்களை எடுத்துக்கொண்டு வரிசைகட்டி நிற்கின்றனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு ஒருபுறம் தலைவிரித்தாடுகிறது.

சுகாதார கட்டமைப்பு இல்லாத மாநிலங்களாக குஜராத், உத்தரப்பிரதேசம் இருப்பதை கண்கூடாக பார்க்க முடிவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். நாள்தோறும் அதிகமாகும் பாதிப்புகளால் உலகளவில் கொரோனா பாதிப்பில் பிரேசிலை பின்னுக்குத்தள்ளி இந்தியா 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக ப்ளூம்பெர்க் ஆய்வு கூறுகிறது. 

அந்த ஆய்வின்படி, மரபணு மாற்றம் அடைந்த டபுள் மியூட்டன்ட் கொரோனா வைரஸ் இந்தியாவை மிகக் கடுமையாக பாதித்திருப்பதாகவும், அதனால் மருத்துவமனைகளும், மயானங்களும் நிரம்பி வழிவதாக தெரிவித்துள்ளது.

தொற்றுநோய் தடுப்பு நிபுணரும், உலக சுகாதாரமையத்தின் கொரோனா தடுப்பு டெக்னிக்கல் குழுவின் தலைவருமான மரியா வான் கெர்கோவ் (Maria Van Kerkhove) பேசும்போது, இந்தியாவில் பரவி வரும் உருமாறிய கொரோனாவை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார். 

உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் கவலையளிக்கக்கூடிய வகையில் இருப்பதாகவும், இந்தியாவில் இருப்பதுபோல் மற்ற சில வேரியண்ட் கொரோனா உலகளவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். உருமாறிய கொரோனா வேகமாக பரவுவதில் இருக்கும் ஒத்தநிலை அறியப்படிருப்பதாகவும், தடுப்பூசிகள் அவற்றை கட்டுபடுத்தும் என நம்புவதாகவும் மரியா வான் கெர்கோவ் கூறியுள்ளார்.

வைரஸ் உருமாறுவதில் எந்த வியப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ள நிபுணர்கள், சில வைரஸ்கள் உருமாறிய பிறகு வீரியம் குறைந்துவிடும், சில வைரஸ்கள் உருமாறிய பின்பு முன்பைவிட உக்கிரமாக செயலாற்றும் என தெரிவித்துள்ளனர். 

அந்தவகையில் உருமாறிய வைரஸான கொரோனா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக கூறியுள்ளனர். உலகளவில் இதுவரை 3 வகையாக மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் அந்த வைரஸ்கள் பாதிப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்தியாவில் இருக்கும் உருமாறிய வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது கவலையளிக்கக்கூடியது என கூறியுள்ள நிபுணர்கள், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டபுள் மியூட்டன்ட் வைரஸ் ஏற்கனவே 10 நாடுகளுக்கு பரவிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 

B.1.617 வேரியண்ட் வைரஸ் மிகவும் ஆபத்தான வைரஸ் என ஹார்வார்ட் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் வில்லியம் ஹேஸ்ட்லைன் (William A. Haseltine) எச்சரித்துள்ளார். இந்த வைரஸ் பரவலை உடனடியாக அடையாளம் கண்டு கட்டுப்படுத்தாவிட்டால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள ஆய்வு ஒன்றில், 2021ம் ஆண்டு பிற்பகுதியில் கொரோனா கட்டுப்படுத்தப்படும் என உலக நாடுகள் நினைத்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், அது நடக்கவில்லை எனக் கூறியுள்ள அவர், நல்ல தலைமை, நிர்வாகம், சமூக பொறுப்பு மற்றும் மருத்துவம் ஆகிய நான்கும் ஒரே நேர்கோட்டில் பயணித்தால் மட்டுமே வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறியுள்ளார். 

இந்த செய்தியையும் படிங்க….

 அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படாது – மத்திய அரசு..!! 

பெரும்பாலான நாடுகளில் முதல் மூன்றும் சரியாக இல்லாமல் மருத்துவ உதவியை மட்டுமே பெரிதாக நம்பியிருப்பதாகவும், அதனால் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்திவிடலாம் என நினைப்பது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார். தொழில்நுட்பங்களை மட்டும் நம்பியிருக்காமல், ஒவ்வொருவரும் தங்களை தற்காத்துக்கொள்ள கவனம் செலுத்த வேண்டும் என்றும் வில்லியம் ஹேஸ்ட்லைன் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Comment