அஞ்சல் துறையில்- முகவர், கள அலுவலர்கள் பணிக்கு வரவேற்பு..!!
நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் அஞ்சல் கோட்டத்தில் மே, 12 காலை, 10:00 மணிக்கு அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான நேரடி முகவர்கள், கள அலுவலர்கள் பணிக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்த செய்தியையும் படிங்க….
மே 1ம் தேதி முதல் -ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை: என பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை..!!
ஆர்வம் உள்ளவர்கள் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், ரவி பிளாசா, ஆண்டவர் பெட்ரோல் பங்க் அருகில், திருச்சி சாலை, நாமக்கல் என்ற முகவரிக்கு, தங்களின் வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், பான்கார்டு நகல், ஆதார் நகல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஒரு புகைப்படம் மற்றும் தங்களை பற்றிய முழு விவரங்களுடன் நேர்காணலில் பங்கேற்கலாம்.
கல்வி தகுதியாக முகவர்களுக்கு, 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் தகுதியுடையவர்களாவர். ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், சுயதொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் பங்கேற்கலாம். கள அலுவலர் பணிக்கு ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், அதிகாரிகள், 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த செய்தியையும் படிங்க….
8TH PASS- தமிழக அரசில் 3557 காலியிடங்கள் அறிவிப்பு..!!
மத்திய மற்றும் மாநில அரசுகளில் பணி ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது துறை ரீதியாக எந்தவித ஒழுங்கு நடவடிக்கைகளும் நிலுவையில் இருக்கக் கூடாது. 5,000 ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை பெற, அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.