மாநில அரசுகளுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ.100 குறைப்பு..!!
மாநிலங்களுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ.400லிருந்து ரூ.300ஆக குறைக்கப்படுவதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்வுக்கு பல்வேறு மாநிலங்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில் தற்போது 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க….
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படாது – மத்திய அரசு..!!
இதுகுறித்து சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனவாலா, ”மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில், மாநில அரசுகளுக்கு ஒரு 400 ரூபாய்க்கு கொடுப்பதாக சொல்லியிருந்த தடுப்பூசியை 300 ரூபாயாகக் குறைக்கிறோம். இது மாநில அரசுகளின் கோடிக்கணக்கான நிதியை மிச்சப்படுத்தும். மேலும் அதிக தடுப்பூசிகளை வாங்கவும், எண்ணற்ற உயிர்களை காப்பாற்றவும் உதவும்” என்று கூறியுள்ளார்.
தனியார் நிறுவனங்களுக்கு ஒரு தடுப்பூசி ரூ.600க்கும், மாநில அரசுகளுக்கு ரூ.400க்கும் வழங்கப்படும் என கூறியிருந்த நிலையில், தற்போது மாநில அரசுகளுக்கு மட்டும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்களுக்கு ரூ.200 மிச்சமாகும் என கூறப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி விலையைக் குறைக்க மத்திய அரசும் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.