Gold Rate Today: கிடுகிடுவென உயரும் தங்கம் விலை; மேலும் உயருமா…!!!
சென்ற ஆண்டு, கொரோனா காலத்தில் (Corona Virus) ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றில் அதிக முதலீடு செய்தனர். இதனால் விலைகள் பெருமளவில் அதிகரித்தன. கடந்த ஆண்டு ஆகஸ்டில் தங்கம் பத்து கிராமுக்கு 56,191 ரூபாயாக இருந்தது. வெள்ளியும் ஒரு கிலோவுக்கு ரூ.78,000 என்ற அளவில் விற்பனையானது.
இந்த செய்தியையும் படிங்க…
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்கு -தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும்..!!
ஆனால், மீண்டும் கொரோனாவின் கோர தாண்டவம் தொடங்கியுள்ள நிலையில், தங்கத்தில் விலை அதிகரித்து வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 அதிகரித்து, ரூ.4456 என்ற அளவில் விற்பனையாகிறது. சவரன் ஒன்றுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.35648 என்ற விலையில் விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.38520 என்ற விலையில் விற்பனையாகிறது
வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. 1 கிராம் வெள்ளி 60 காசுகள் அதிகரித்து ரூ.73.90க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.73,900 என்ற அளவில் விற்பனையானது.
இந்த செய்தியையும் படிங்க…
அஞ்சல் துறையில்- முகவர், கள அலுவலர்கள் பணிக்கு வரவேற்பு..!!
கடந்த சில காலங்களாக ஏற்ற இறக்கம் காணப்படும் நிலையில், கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், தங்கல் விலை மேலும் அதிகரிக்கும் என வர்த்தகர்கள் கருதுகின்றனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் முதலே தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.