உருமாறிய கொரோனா தொற்றின் அறிகுறிகள் என்ன தெரியுமா..??- வீட்டில் இருந்தே இந்த எளிய வழிமுறைகள் மூலம் கண்டுபிடித்து விடலாம்..!!
உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் ஒருவருக்கு உள்ளதா என்பதை இந்த எளிய வழிமுறைகள் மூலம் வீட்டில் இருந்தே கண்டுபிடித்து விடலாம்.
இந்த செய்தியையும் படிங்க…
மாநில அரசுகளுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ.100 குறைப்பு..!!
கடந்த ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி பலரின் உயிர்களை பறித்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு சில மாதங்கள் கொரோனா தொற்றின் தாக்கம் குறைய துடங்கியது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் அசுர வேகம் எடுத்து இரண்டாவது அலையாக ருத்ர தாண்டவம் ஆடுகிறது. ஆனால், இந்த முறை கொரோனா வைரஸின் தாக்கம் மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் நாளொன்றுக்கு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் முதல் முறை கொரோனா பரவ தொடங்கிய போது, அதற்கான அறிகுறிகள் இது தான் என அனைவருக்கும் விழிப்புணர்வு இருந்தது. ஆனால், தற்போது உருமாறியுள்ள கொரோனா வைரஸ் அறிகுறிகள் இன்றி மனிதர்களை தாக்குகிறது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டு சில நாட்களில் நேரடியாகவே நுரையீரல் செயல் இழப்பை ஏற்படுத்தி, ஆபத்தான நிலைக்கு சென்ற பின் மருத்துவர்களால் குணப்படுத்த முடியாமல் மரணத்தில் முடிகிறது.
இந்நிலையில் இது குறித்து இலங்கையை சேர்ந்த வைத்தியர்கள் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியாவில் உருமாறி உள்ள கொரோனா வைரஸ் தற்போது இலங்கையையும் தாக்கி உள்ளது. ஆனால், இதன் அறிகுறிகள் காய்ச்சல், தொண்டை வழியாக இல்லை மாறாக உடல் வலியும் மூச்சுத் திணறலும் மட்டுமே உள்ளது. இதானால், இந்த எளிய முறையை பின் பற்றி நீங்களே சுலபமான முறையில் கண்டுபிடித்து விடலாம்.
இவைகள் தான், உருமாறிய கொரோனா தொற்று ஒருவருக்கு இருப்தற்கான அறிகுறிகள்,
1) இதுவரை நீங்கள் இலகுவாக ஏறி இறங்கிய மாடி படிகள் அல்லது, தற்போது ஏற முடியாமல் மூச்சு வாங்குவது.
2) தொடர்ச்சியாக சில நிமிடங்கள் கூட பேச முடியாமல் அவதி படுவது.
3) சிறிது தூரம் கூட நடக்க முடியாமல் மூச்சு அடைப்பது போன்ற உணர்வு. மேலும்,
4) முழங்கால் மற்றும் முதுகு உயிர் போவது போல் குத்துவது.
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக நீங்கள் உங்களுக்கு கொரோனா உள்ளதா என பரிசோதனை செய்யுங்கள்.
இந்த செய்தியையும் படிங்க…
உஷார்..!! இந்த 9 தமிழக மாவட்டங்களில் முழு ஊரடங்கு..!!
மேலும், நீங்கள் உங்களின் மூச்சை பிடித்துக் கொண்டு 1ல் இருந்து 20 வரை அல்லது ஒன்றில் இருந்து 40வரை எண்ணுங்கள். பின்னர் சிறிது தூரம் நடந்து விட்டு திரும்பவும் ஒன்றில் இருந்து 20 அல்லது 40 வரை எண்ணி பாருங்கள். உங்களுக்கு 20துக்கு மேல் எண்ண முடிந்தால் உங்களுக்கு கொரோனா தாக்கம் இல்லை. ஆனால் 1ல் இருந்து 10 வரை உங்களால் எண்ண முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.