வெற்றி என்றால் சாதாரண வெற்றி அல்ல... தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் திமுக ஆட்சி... எக்சிட் போல்! - Tamil Crowd (Health Care)

வெற்றி என்றால் சாதாரண வெற்றி அல்ல… தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் திமுக ஆட்சி… எக்சிட் போல்!

 வெற்றி என்றால் சாதாரண வெற்றி அல்ல… தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் திமுக ஆட்சி… எக்சிட் போல்!

தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமையும் என்பதை பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த செய்தியையும் படிங்க…

கொரோனா பாதுகாப்பு காரணங்களால், -தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு..!!

234 தொகுதிகளில் 160 தொகுதிகள் முதல் 170 தொகுதிகள் வரை திமுக கூட்டணி வெற்றிபெறும் எனக் கூறுகிறது ரிபப்ளிக் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு முடிவு. இதேபோல் 166 தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவது உறுதி எனக் கூறுகிறது ஏபிபி கருத்துக்கணிப்பு.

இதில் காங்கிரஸ் உள்ளிட்ட இதர கூட்டணிக் கட்சிகளுக்கு 30 தொகுதிகள் வரை சென்று விட்டாலும் கூட குறைந்தது 135 இடங்களிலாவது திமுக தனித்து வெற்றி பெறும் என்பதை கருத்துக்கணிப்பு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

118 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலே ஆட்சி அமைக்க முடியும் என்கிற சூழலில் கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் திமுக இந்த முறை மெஜாரிட்டியாக ஆட்சி அமைக்கக் கூடும்.

கடந்த 2006 -2011 திமுக ஆட்சிக்காலத்தின் போது மைனாரிட்டி அரசு என வார்த்தைக்கு வார்த்தை ஜெயலலிதா விமர்சித்து வந்தார். இந்நிலையில் இந்த முறை அமையவுள்ள திமுக ஆட்சி மெஜாரிட்டி அரசாக அமையவிருக்கிறது.

இதனிடையே பி-மார்க் என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக 190 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் இன்று வெளியான அனைத்துக் கருத்துக் கணிப்பு முடிவுகளும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

இதேபோல் டுடேஸ் சாணக்யா நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவில், திமுக 186 இடங்களில் வெற்றிபெற்று அபார சாதனை படைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படிப் பார்த்தாலும் திமுக 163 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றிபெறும் என்பதை கருத்துக்கணிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த செய்தியையும் படிங்க…

முகவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்; உடல் வெப்பம் அதிகம் இருந்தால் அனுமதி இல்லை: தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு..!! 

இதனால் திமுக வட்டாரம் மிகுந்த உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளது. இப்போதே பல இடங்களில் ஒருவருக்கொருவர் வாழ்த்தை பரிமாறிக் கொண்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.

Leave a Comment