தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில்- ஒரே விதிமுறை பின்பற்றப்படுமா..?? - Tamil Crowd (Health Care)

தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில்- ஒரே விதிமுறை பின்பற்றப்படுமா..??

 தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில்- ஒரே விதிமுறை பின்பற்றப்படுமா..??

தமிழகம் முழுதும், தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில், ஒரே மாதிரியான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்’ என, தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து உள்ள மனு:ஒவ்வொரு, 500 தபால் ஓட்டுகளையும், ஒரு மேஜையில் எண்ணும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 

இது, நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடக்க வழிவகுக்கும். ஆனால், இதற்கு நீண்ட நேரமாகும். அங்கிருப்போருக்கு நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்பு அதிகரிக்கும். இதை தவிர்க்க, தபால் ஓட்டுகளை, அதிக மேஜைகளில் எண்ண வேண்டும்.மேலும், தபால் ஓட்டுகள் எண்ணிக்கை விதிமுறைகள், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும், ஒரே மாதிரியாக தெரிவிக்கப்படவில்லை. சென்னை மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், ‘மேஜையில், 500 தபால் ஓட்டுகள் வீதம் எண்ணப்படும்; இடையிடையே தான் தபால் ஓட்டுகள் எண்ணப்படும்’ என்கிறார். 

இந்த செய்தியையும் படிங்க…

கொரோனா பாதுகாப்பு காரணங்களால், -தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு..!!

இது, சரியான முறைஅல்ல.மேலும், இரண்டு தொகுதிகளில், 2,000க்கும் அதிகமான தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. எனவே, இதை எண்ணி முடிக்க கூடுதல் நேரமாகும்.விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ணி, முடிவை அறிவிக்கும் போது தான், தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும் என்கின்றனர். 

இது,சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில், வெவ்வேறு விதமான முறைகளை கையாள முடிவு செய்துள்ளனர். இது, குழப்பத்தை ஏற்படுத்தும்.எனவே, தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில், ஒரே மாதிரியான விதிமுறைகளை பின்பற்றும் படி, அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்.தபால் ஓட்டுகளை எண்ணி முடித்ததும், உடனே முடிவை வெளியிட உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment