பூனை -சுவாரஸ்யமான தகவல் - Tamil Crowd (Health Care)

பூனை -சுவாரஸ்யமான தகவல்

பூனை-சுவாரஸ்யமான தகவல்

பாலூட்டி இனம்:

 பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒர் உயிரி ஆகும். அதுமட்டுமல்லாது பூனை மாமிசம்  உண்ணக்கூடிய  ஊனுண்ணி ஆகும். ஆனால் தற்காலத்தில் பூனைகள் வீட்டில் வளர்த்தப்படுவதால் அவை சைவ உணவையும் உண்ண தன்னை பழக்கப்படுத்திக் கொண்டன.

வழிபடும் கடவுள்:

 பல ஆண்டு காலமாக வளர்க்கப்பட்டு வந்ததற்கான சான்றுகளும் பல ஆராய்ச்சிகளின் வழியே கிடைக்கச் செய்கின்றன.  பண்டைய எகிப்தியர்கள் அவர்கள் வழிபடும் கடவுளுள்  ஒன்றாக பூனையை பாவித்துள்ளனர். எகிப்தியர்கள் அரசர், அரசிகளுக்கு கட்டியது போலவே பூனைகளுக்கும் இறந்தப் பிறகு பிரமிடுகளைக் கட்டி பூனைகளை கௌரவித்துள்ளனர்.

இவ்வளவு சிறப்பினைப் பெற்ற பூனையின் உடற்கூறுகளை பார்த்தால் அதன் எடை சராசரியாக 4 கிலோ கிராமாகத் தான் இருக்கும். ஆண் பூனை 4 கிலோகிராமும், பெண் பூனை 3 கிலோகிராமாகவும் இருக்கும். பூனைகளின் உயரம் சராசரியாக 23 -25 செ.மீ இருக்கக் கூடும்.

பூனையின் உடலமைப்பு:

அளவில் பெண் பூனையை விட ஆண் பூனை பெரியதாக இருக்கும். பூனையின் வால் சராசரியாக 30 செ.மீ நீளமுடையதாகவும் காணப்படும். பூனையின் கண்பார்வையும், செவித்திறனும் மிக அதிகத் திறமை வாய்ந்ததாக இருக்கிறது. பூனைகளின் சிறப்புகளுள் ஒன்றான மிகச் சிறிய இடத்தில் கூட நுழைந்து செல்லக்கூடிய உடலமைப்பைக் கொண்டதே ஆகும். இதற்கு காரணம் பூனையின் முன்னங்கால்கள் விலா எலும்புகளால் இணைக்கப்பட்டுள்ளதே ஆகும்.

பூனையின் நுகரும் திறன்:

பூனைகள் உயரமான இடங்களிலும் சாதாரணமாக ஏறக்கூடியவை. அவற்றின் முன்னங்கால்களில் 5 நகங்களும், பின்னங்கால்களில் 4 நகங்களும் காணப்படும். பூனையின் பாதம் பஞ்சுப் போன்று மெதுவாக காணப்படும். மனிதனுடன் ஒப்பிடும்போது பூனைகளுக்கு நுகரும் திறன் 14 மடங்கு அதிகமாக இருக்குமாம். பூனைகளால் இனிப்புச் சுவையை உணர முடியாதாம், காரணம் பூனையின் நாக்கில் இனிப்புச் சுவையை உணரக்கூடிய நுகர்மொட்டுகள் இல்லாததே  காரணம். மரபணு மாற்றத்தின் காரணமாக பூனைகள் இத்திறனை இழந்திருக்கக் கூடும். பூனைகள் குட்டிகளை தன் கருவில் 2 மாதங்கள் சுமக்கின்றன. பூனைகள் தன் வாழ்நாளில் அதிகபட்சமாக 150 குட்டிகளை ஈனுகின்றன.

செவித்திறன்:

பூனைகள் அளவில் சிறியதாக இருந்தாலும் மாமிச உணவுகளை லாவகமான உண்ணக் கூடிய அளவு பல் அமைப்புகளைக் கொண்டு உள்ளன. அவற்றின் மண்டையோடும் மற்ற பாலூட்டிகளில் இருந்து மாறுபட்டு காணப்படுகின்றன. பூனைகளின் ஆயுட்காலம் 30 ஆண்டுகளாக உயர்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பூனைகள் பகலைவிட இரவு நேரங்களில் கூர்மையான துள்ளியமான கண்பார்வையைக் கொண்டுள்ளது. இதனால் பூனைகள் மிக குறைந்த வெளிச்சத்தில் கூட தனது உணவைத் தேடிக் கண்டுபிடிக்கின்றன.

இதேபோல் செவித்திறனும் பூனைகளுக்கு அதிகமென்பதால் மிக குறைந்த அதிர்வெண்ணில் உண்டாகக் கூடிய சத்தத்தையும் கேட்டு தன் இரையை எளிதில் கையாளுகின்றன.

பூனையின் மற்றொரு சிறப்பு:

பூனைகள் 10,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆப்பிரிக்கரால் வளர்ப்புப்பிராணியாக பழக்கப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றதாக தொல்பொருள் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பூனையின் மற்றொரு சிறப்பு பூனைகளால் 100 விதமான ஒலிகளை எழுப்ப முடியுமாம்.பூனைகள் தங்கள் வாழ்நாளில் தூங்குவதற்காகவே அதிக நேரத்தை செலவிடுகின்றன. இயற்கை சீற்றங்களை முன் கூட்டியே உணரக் கூடிய சக்தி பூனைகளுக்கு உண்டு. ஒரு நிமிடத்திற்கு கணக்கிடும்போது பூனையின் இதயத்துடிப்பு மனிதனின் இதயத்துடிப்பை விட அதிகமாம். 

சுவாரஸ்யமான தகவல்:

இவற்றை எல்லாவற்றையும்விட பூனையைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவெனில் பூனையானது ஒரு நாளைக்கு 5 மணி நேரத்தை தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளவே பயன்படுத்துகிறது. உருவத்தில் சிறியதாக இருந்தாலும் பூனையின் எலும்புகள் மனிதர்களை விட அதிகமாம். பல நாடுகளில் பூனைகள் உணவுக்காக அடித்துக் கொள்ளப்படுகின்றன. சில நாடுகளில் பூனைக்களுக்கு துன்பம் விளைவித்தால் தண்டனைக்குரிய செயலாக கருதப்படுகிறது. பூனைகளின் சிறுநீரகங்கள் உப்பை பிரித்து எடுக்கக்கூடிய திறன் கொண்டவையாக உள்ளன. பூனையின் சிறுநீரகம் இருட்டில் மின்னக்கூடியது.  பூனைகள் தங்கள் பாதங்களின் வழியாக தன் வியர்வையை வெளியேற்றுகின்றன. 

Leave a Comment