டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு- நீட்டிப்பு..!! - Tamil Crowd (Health Care)

டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு- நீட்டிப்பு..!!

 டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு- நீட்டிப்பு..!!

டெல்லியில் மே 10-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கும் என அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை காரணமாக டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த செய்தியையும் படிங்க…

7th Std Bridge Course Worksheet and  Key Answers (All Subjects):

🔴🔴 7th Std Tamil Bridge Course Worksheet and Key Answers 2021|

🔴🔴 7th Std English Bridge Course Worksheet and Key Answers 2021.

🔴🔴 7th Std Maths Bridge Course Worksheet and Key Answers 2021.

🔴🔴 7th Std Science Bridge Course Worksheet and Key Answer 2021.

🔴🔴 7th Std Social Science Bridge Course Worksheet and Key Answers 2021|

இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 19-ஆம் தேதி நள்ளிரவு முதல் 26-ஆம் தேதி அதிகாலை 5 மணிவரை ஒரு வார காலம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் கடந்த மாதம் 25-ஆம் தேதி உத்தரவு ஒன்றை அர்விந்த் கெஜ்ரிவால் பிறப்பித்தார். அதில், ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி காலை 5 மணி வரை மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீடிக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில், நாளை மறுநாள் காலை 5 மணியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கபப்ட்டுள்ளது. அதன்படி மே 10-ஆம் தேதி வரை டெல்லியில் முழு ஊரடங்கு நீடிக்கும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஏற்கனவே என்னென்ன கட்டுப்பாடுகள் உள்ளதோ அது தொடரும் எனவும், என்னென்ன அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளோதோ அதுவும் தொடரும் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment