ஸ்டாலின் அமைச்சரவையில்- இந்த 3 சமூகங்களுக்குத்தான் முக்கியத்துவம்..!!
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் திமுகவுக்கு சாதகமாக இருந்ததாலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை உடனடியாக வெளியிட முடியாவிட்டாலும் அம்முடிவுகள் ஸ்டாலின் கைக்கு கிடைத்திருக்கின்றன. அதில் பெரும்பாலான முடிவுகள் எல்லாம் திமுகவுக்கே சாதகமாக சொல்லி இருந்ததால்தான் உற்சாகத்தில் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்கச் சென்றிருக்கிறார்.
பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி தேர்தலில் புதியவர்களுக்குத்தான் வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிற முடிவில் இருந்திருக்கிறார் ஸ்டாலின். ஆனால், தேர்தல் நெருக்கத்தில் அந்த முடிவினை மாற்றிக்கொண்டு கருணாநிதி அமைச்சரவையில் இருந்த பலருக்கும் வாய்ப்புகளை வழங்கிவிட்டார். தேர்தலில்தான் இந்த தாராளமே தவிர, அமைச்சரவையில் புதியவர்களுக்கே அதிக முக்கியத்துவம் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.
முப்பத்து ஐந்து பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலில் புதியவர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். கருணாநிதி அமைச்சரவையில் இருந்தவர்களில் ஒரு சிலரின் பெயரைத்தான் அந்த பட்டியலில் எழுதி இருக்கிறாராம். இது போக, அமைச்சரவையில் மூன்று சமூகங்களூக்கு அதிக முக்கியத்துவம் வரும்படி பார்த்துக்கொண்டாராம்.
முக்குலத்தோர், கொங்கு வேளாளர், வன்னியர் ஆகிய மூன்று சமூகத்தினருக்குத்தான் ஸ்டாலின் அமைச்சரவை பட்டியலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிற தகவல் கசிய, அதில் பவர் ஃபுல் இலாகாவை கைப்பற்ற ஜூனியர்கள் பலரும் உதயநிதி மூலமாக காய் நகர்த்திக்கொண்டிருப்பதாக தகவல்.