ஸ்டாலினின் -அசராத அரசியல் பயணம்..!! - Tamil Crowd (Health Care)

ஸ்டாலினின் -அசராத அரசியல் பயணம்..!!

 ஸ்டாலினின் -அசராத அரசியல் பயணம்..!!

இளம் வயதில் அரசியலில் இறங்கியவர் ஸ்டாலின். ‘நமக்கு நாமே’ பயணம், கிராம சபை கூட்டம் நடத்தி மக்களை சந்தித்தார். இவரது முதல்வர் கனவு நனவாகியுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

 ‘சத்தான உணவு சாப்பிட்டால், 80 சதவிகித நோய்களைத் தடுக்கலாம்’- உலக சுகாதார நிறுவனம்..!!

  • .1953 மார்ச் 1: சென்னையில் பிறந்தார். ரஷ்ய கம்யூனிச தலைவர் ஸ்டாலின் நினைவாக பெயர் வைக்கப்பட்டது.
  •  1973: தி.மு.க., பொதுக்குழு உறுப்பினரானார் 
  • 1983: இளைஞர் அணி மாநில செயலராக நியமனம்
  • 1984: சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வி
  • 1987: ஒரே ரத்தம் திரைப்படத்தில் நடித்தார்
  • 1989: ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி
  • 1991: ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வி 1993: ‘இளைய சூரியன்’ இதழின் ஆசிரியராக பணியாற்றினார்
  • 1996: ஆயிரம் விளக்கு தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி
  •  1996: சென்னை மேயராக பதவியேற்பு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயரானார்
  • 2001: மீண்டும் மேயர். ஆயிரம் விளக்கு தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி 
  • 2002: ‘ஒருவருக்கு ஒரு பதவி’ சட்டத்தால், மேயர் பதவியை ராஜினாமா செய்தார்
  •  2003: தி.மு.க., துணை பொதுச் செயலரானார் 
  • 2006: ஆயிரம் விளக்கு தொகுதியில் நான்காவது முறை வெற்றி. உள்ளாட்சி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரானார்
  •  2008: தி.மு.க., பொருளாளராக தேர்வு
  • 2009: துணை முதல்வராக பதவியேற்பு
  • 2011: கொளத்துாரில் வெற்றி 
  • 2013: ‘என் அரசியல் வாரிசு ஸ்டாலின்’ என, கருணாநிதி அறிவிப்பு 2016: எதிர்க்கட்சி தலைவரானார்
  •  2017 ஜன., 4: தி.மு.க., செயல் தலைவரானார்
  •  2018 ஆக., 28: தி.மு.க., தலைவராக பொறுப்பேற்பு
  •  2021 மே 2: சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி; ஸ்டாலின் முதல்வராகிறார்.

Leave a Comment