மூன்றாவது இடத்தில்- ‘விவசாயி’..!!
இரட்டை இலை, உதயசூரியனை தொடர்ந்து, மூன்றாவது இடத்தை, நாம் தமிழர் கட்சியின் சின்னமான, ‘விவசாயி’ கைப்பற்றி, வெகுஜன சின்னமாக மாறியுள்ளது.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., – தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., போன்ற கட்சிகள், கூட்டணி அமைத்து, 234 தொகுதிகளில் போட்டியிட்டன.ஆனால், 234 தொகுதிகளிலும், சரிசமமாக ஆண், பெண் வேட்பாளர்களை நிறுத்தி, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது.
இந்த செய்தியையும் படிங்க…
‘சத்தான உணவு சாப்பிட்டால், 80 சதவிகித நோய்களைத் தடுக்கலாம்’- உலக சுகாதார நிறுவனம்..!!
வரவேற்பு:
நாம் தமிழர் கட்சியை துவக்கிய பின் சந்தித்த, 2016 சட்டசபை தேர்தலில், தனித்து போட்டியிட்டு, 1 சதவீதம் ஓட்டுகள் பெற்றது.கடந்த, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிட்டு, 4 சதவீதம் ஓட்டுகளை வாங்கி, கூடுதல் பலத்தை நிரூபித்தது. பின் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், 10.5 சதவீதம் ஓட்டுகளை வாங்கியது.தொடர்ந்து, இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு, இரட்டை இலை, உதயசூரியனை தொடர்ந்து, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதால், அக்கட்சியின் விவசாயி சின்னம், வெகுஜன சின்னமாக மாறியுள்ளது.
இளைஞர்கள், இளம் பெண்கள், புது வாக்காளர்கள், நடுநிலை வாக்காளர்களின் ஓட்டுகள், மூன்றாவது இடத்தை தக்க வைக்க உதவி செய்துள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடு, மண் வளம் பாதுகாப்பு போன்ற கோட்பாடுகளை மையப் படுத்திய அக்கட்சியின் பிரசாரம், கிராமப்புற மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுகள், தி.மு.க.,விற்கு கிடைக்கவிடாமல், நாம் தமிழர் கட்சி பிரித்துள்ளதால், பல தொகுதிகளில், அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு காரணமாகியுள்ளது.
மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., போன்ற கட்சிகளை பின்தள்ளி விட்டு, நாம் தமிழர் கட்சி, மூன்றாவது இடத்தை பிடித்து, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, இந்த தேர்தலில் தன்னை நிரூபித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
அடிக்கடி நெட்டி முறிக்கும் பழக்கம் இருக்கா-உங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..!!
இது குறித்து, சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும் ஓட்டுகள், கூட்டணி சேராமல், பணம் கொடுக்காமல், திரை கவர்ச்சி இல்லாமல், ஊடக பலம் இல்லாமல், தனித்து நின்று பெற்ற ஓட்டுகள். ‘அனைத்து கட்சிகளும் தனித்து நின்று பார்த்தால் தெரியும், நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு என்னவென்று’ என, கூறியுள்ளார்.