Pre KG, LKG, UKG பள்ளிகள் திறப்பு- முதல்வர் உத்தரவு..!! - Tamil Crowd (Health Care)

Pre KG, LKG, UKG பள்ளிகள் திறப்பு- முதல்வர் உத்தரவு..!!

 Pre KG, LKG, UKG  பள்ளிகள் திறப்பு- முதல்வர் உத்தரவு..!!

Pre KG, LKG, UKG நேரடி வகுப்புகள் தொடக்கம்:

தமிழகத்தில் 1-12 ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் நடத்தப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் Pre KG, LKG, UKG நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது. 

தமிழகத்தில் Pre KG, LKG, UKG வகுப்புகள் மட்டும் நடத்தப்படாமல் இருந்த நிலையில், தனியார் பள்ளிகள் முதல்வரிடம் குழந்தைகளின் கற்றலை கருத்தில் கொண்டு மழலையர் பள்ளிகளையும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

முதல்வர் உத்தரவு:

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் நாளை (பிப்ரவரி 16) முதல் 20,000 மழலையர் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது.

தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று நாளை முதல் (பிப்ரவரி 16) Pre KG, LKG, UKG வகுப்புகள் ஆரம்பமாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர்களின் நேரடி கண்காணிப்பில் குழந்தைகளுக்கு பாடம் கற்பித்தால் கற்றல் பணி எளிதாக இருக்கும் என்று பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment