தமிழகத்தில் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை- விரைவில் அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

தமிழகத்தில் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை- விரைவில் அறிவிப்பு..!!

 தமிழகத்தில் 5 நாட்கள் பள்ளிகளுக்கு  விடுமுறை- விரைவில்


 அறிவிப்பு..!!

  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்-பிப்ரவரி-19
  • வாக்கு எண்ணிக்கை-பிப்ரவரி-22

தமிழகத்தில் சென்னை உட்பட மாநகராட்சிகளுக்கு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கை வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது.

பள்ளிகளுக்கு  விடுமுறை அளிக்க வாய்ப்பு:

இதன் காரணமாக, தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

வாக்குச் சாவடிகள் :

பெரும்பாலும், பள்ளிகளில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுவதாலும், தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுவதாலும் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம், 5 நாட்கள் அல்லது 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19-ம் தேதி அதாவது சனிக்கிழமை நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் பள்ளிகளுக்கு விடுமுறை. வாக்கு எண்ணிக்கை 22-ம் தேதி நடைபெற உள்ளது.

எதிர்பார்ப்பு:

எனவே, 22-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு பிறகு, 23-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment