கொரோனா ரூ.2000 நிதியுதவி-டோக்கனின் சிறப்பு..!!
திமுக ஆட்சி அமைந்தவுடன் கருணாநிதி உதவியாக ரூ.4,000 அளிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த செய்தியையும் படிங்க…
கரோனாவுக்கு புதிய மருந்து; தண்ணீரில் கலந்து குடிக்கலாம்..!!
அதன்படி தற்போது மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியுள்ளதுடன், முதற்கட்டமாக ரூபாய் 2000 நாளை முதல் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு, 4,153.39 கோடி ரூபாய் செலவு தமிழக அரசுக்கு ஏற்படும்.
10ம் தேதி முதல் டோக்கன் தரப்பட்டு தினமும் 200 பேருக்கு நிவாரண நிதி அளிக்கப்படும் என்றும் வீடு, வீடாக டோக்கன் அளிக்கப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அத்துடன் டோக்கன் முறையாக தரப்படுகிறதா? என கண்காணிக்க துணை தாசில்தார் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை தாக்கும் புதிய தொற்று..!!