உங்கள் குழந்தைகளுக்கும் மறக்காமல் ஆதார் எடுத்து விடுங்கள்- எப்படி தெரியுமா?
ஆதார் நமது நாட்டில் மிக முக்கியமான ஒன்று என்பதால் உங்கள் குழந்தைகளுக்கும் மறக்காமல் எடுத்துவிடுங்கள்.
இந்த செய்தியையும் படிங்க…
கரோனாவுக்கு புதிய மருந்து; தண்ணீரில் கலந்து குடிக்கலாம்..!!
ஆதார் அட்டை என்பது இந்தியாவில் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும் அதிலும் இன்றைய காலகட்டத்தில் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன. வங்கிக் கணக்கு, மொபைல் எண், வருமான வரி தாக்கல், அரசு உதவிகள் இப்படி எதற்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கடன் மோசடிகளைக் குறைக்கவும் பான் கார்டுகளுடன் ஆதாரை இணைக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் வந்துள்ளன. இவ்வாறாக தனிநபர் சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் தற்போது ஆதார் கார்டு அவசியமாக உள்ளது.
பிறந்த முதல் நாளே குழந்தைக்கு ஆதார் எடுக்கும் வசதியை ஆதார் அமைப்பு (UIDAI) ஏற்படுத்தியுள்ளது. சில மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைக்கு ஆதார் எடுக்கும் வழிமுறையை மருத்துவமனைகளே மேற்கொள்கின்றன. அப்படி, ஆதார் எடுப்பதற்கு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மட்டும் போதுமானது. குழந்தையின் தாய் அல்லது தந்தையின் ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்கள் தேவைப்படும். பிறந்த ஒரு நாள் முதல் 5 வயது வரை குழந்தைக்கு கைரேகைப் பதிவு எடுக்க இயலாது. 5 வயது தாண்டிய பின்னர் கைரேகையை அப்டேட் செய்துகொள்ளலாம்.
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை தாக்கும் புதிய தொற்று..!!
குழந்தைக்கு ஆதார் எடுப்பதற்கு முதலில் ஆதார் இணையப் பக்கத்தில் சென்று அப்பாயிண்ட்மெண்ட் பெற வேண்டும். அதற்கு ஆதார் இணையப் பக்கத்தில் சென்று இதற்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து குழந்தையின் பெயர், தந்தை/தாய் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைப் பதிவு செய்து பின்னர் ஆதார் எடுப்பதற்கான அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்துவிடும். தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு ஆதார் மையத்துக்குச் சென்று ஆதார் எடுக்கலாம்.