கொரோனாவை கட்டுப்படுத்த- 6 யோசனைகள்..!! - Tamil Crowd (Health Care)

கொரோனாவை கட்டுப்படுத்த- 6 யோசனைகள்..!!

 கொரோனாவை கட்டுப்படுத்த- 6 யோசனைகள்..!!

உலகம் முழுவதுமே அச்சுறுத்தி வரும் கொரோனா இரண்டாவது அலை, தற்போது இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு முறைகளை மேற்கொண்டு வந்த போதிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த செய்தியையும் படிங்க…

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை தாக்கும் புதிய தொற்று..!! 

இது குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பிரதமருக்கு 6 யோசனைகள் தெரிவித்தார்.

அதன்படி இந்தியாவில் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியுள்ளது. படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, ரெம்டெசிவிர் மருந்துகள், வென்டிலேட்டர் வசதி இல்லாமல் மாநில அரசுகள் திண்டாடி வருகின்றன. கொரோனா சிகிச்சைக்காக மக்கள் தடுமாறி வருகின்றனர்.

1.மத்திய அரசு கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை பிரதமர் கையாளவேண்டும்.

2.உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் கூட்டவேண்டும்.

3.அனைத்து மக்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.தடுப்பூசி உற்பத்தி,மருத்துவக் கருவிகள், பாதுகாப்பு உடைகள் (பிபிஇ), ஆம்புலன்ஸ்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீது வரிகளை நீக்கவேண்டும்.

5.வெளிநாடுகளில் இருந்த வந்தமருத்துவ நிவாரணப் பொருட்களை உடனடியாக விநியோகம் செய்யவேண்டும்.

6. வேலை இல்லாதவர்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் வழங்கப்படும் ஊதியத்தை ரூ.100-லிருந்து ரூ.200 ஆக உயர்த்தவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment