முழு ஊரடங்கு : எவையெல்லாம் இயங்கும், எவையெல்லாம் இயங்காது? முழு விவரம்..!!
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள முழு முடக்கம் இன்று அமலுக்கு வந்துள்ளது. முழு முடக்கத்தின்போது எவையெல்லாம் இயங்கும், எவையெல்லாம் இயங்காது என்று விரிவாக தெரிந்துகொள்வோம்.
இந்த செய்தியையும் படிங்க…
உங்கள் குழந்தைகளுக்கும் மறக்காமல் ஆதார் எடுத்து விடுங்கள்- எப்படி தெரியுமா?
எவையெல்லாம் இயங்கலாம்:
- தமிழகத்தில் திங்கள் கிழமை முதல் மே 24ஆம் தேதி வரை முழு முடக்கம் அமலில் இருக்கும்.
- அந்த காலக்கட்டத்தில், தனித்து இயங்கும் மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்கள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.
- அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், கூரியர் சேவைக்கு அனுமதி வழங்கப்படுவதோடு, மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருத்துவ ஆய்வகங்கள் திறந்திருக்கும். உரம், விதை, பூச்சிக்கொல்லி விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் நண்பகல் 12மணிவரை இயங்க அனுமதிக்கப்படும்.
- உணவகங்களில் காலை 6மணி முதல் 10மணி வரை, நண்பகல் 12மணி முதல் 3மணி வரை, மாலை 6மணி முதல் இரவு 9மணி வரை பார்சல்கள் வழங்கலாம்.
- சுவிக்கி, சொமோட்டோ போன்ற உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- மிக முக்கியமாக ஊரடங்கு காலத்தில் அம்மா உணகவங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காய்கறி, பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரையும், நியாயவிலைக்கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரையும் செயல்பட அனுமதிக்கப்படும்.
- நீதித்துறை, நீதிமன்றங்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைதுறையினர் செயல்படத் தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 20 நபர்களுக்கு மிகாமலும் பங்கேற்க அனுமதி வழங்கும் நடைமுறை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
எவையெல்லாம் இயங்காது:
- முழு முடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- மளிகை, காய்கறி, இறைச்சி , மீன் கடைகள் தவிர பிற கடைகளை திறக்க அனுமதி இல்லை.
- அதேபோல் தங்கும் விடுதிகள், அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் செயல்படவும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
- திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், பார்கள், பெரிய அரங்குகள், கேளிக்கை பூங்காக்கள், கூட்ட அரங்குகள் செயல்பட அனுமதி இல்லை எனவும் உள் அரங்குகள், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அத்தியாவசியத் துறை அலுவலகங்கள் தவிர்த்து பிற அரசு அலுவலகங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளதோடு அனைத்து தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.
- சுற்றுலாத் தலங்கள், கடற்கரைகள், பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், தொல்லியல் சின்னங்கள், அகழ்வைப்பகங்கள், அருங்காட்சிகங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மாவட்டங்களுக்குள், மாவட்டங்களுக்கிடையேயான அரசு, தனியார் பேருந்து போக்குவரத்து, வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.