12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா.? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்..!! - Tamil Crowd (Health Care)

12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா.? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்..!!

 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா.? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்..!!

சென்னை தலைமை செயலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். 

இந்த செய்தியையும் படிங்க…

 உங்கள் குழந்தைகளுக்கும் மறக்காமல் ஆதார் எடுத்து விடுங்கள்- எப்படி தெரியுமா? 

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களின் நலன் முக்கியம் என்பதால் மிக நிதானமாக முடிவெடுத்து வருகிறோம். என்ன தான் மிக பாதுகாப்போடு தேர்வை நடத்தினாலும் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. மாணவர்களின் எதிர்காலம் என்பதால் மிக கவனத்துடன் முடிவு எடுக்க உள்ளோம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மற்ற மாநிலங்களில் எடுத்த முடிவின் அடிப்படையில் மதிப்பெண் கொடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம். ஆலோசனை முடிவுகளை முதல்வரிடம் தெரிவித்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் அறிவிப்பு வெளியாகும். 

முன்பு நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவதா அல்லது இன்டர்ணல் மதிப்பெண்கள் அடிப்படையில் முடிவுகளை வழங்குவதா? என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியையும் படிங்க…

 நீண்ட உபாதைகள் இருப்பவர்களுக்கு- புதிய கருப்புப் பூஞ்சை உருவாகிறது: ICMR..!!

மேலும், நகரப் பகுதிகளில் இருக்கும் ஆசிரியர்கள் ஊரகப் பகுதிகளிலிருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பது குறித்தும் பள்ளி கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் அக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தியதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

Leave a Comment