12ம் வகுப்பு தேர்வு குறித்து விரைவில் நல்ல முடிவு : அன்பில் மகேஷ்..!!
12ம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிகாரிகள் பல்வேறு கருத்துக்களை முன் வைத்ததாகக் கூறினார்.
இந்த செய்தியையும் படிங்க…
மத்திய அரசு வேலைவாய்ப்பு.! மாதம் ரூ.1,77,500 வரை சம்பளம்.!
தற்போதைய சூழலில் தேர்வு நடத்துவது என்பது சாதரணமான விஷயம் அல்ல என்ற அன்பில் மகேஷ் அரசுக்கு மாணவர்களின் நலனே முக்கியம் என்றார். நாளையும் நாளை மறுநாளும் இது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து ஆலோசித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.