கோவேக்ஸின் தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதனை: பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு டிசிஜிஐ (DCGI)அனுமதி..!! - Tamil Crowd (Health Care)

கோவேக்ஸின் தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதனை: பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு டிசிஜிஐ (DCGI)அனுமதி..!!

 கோவேக்ஸின் தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதனை: பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு டிசிஜிஐ (DCGI)அனுமதி..!!

கோவேக்ஸின் தடுப்பூசியை 2 முதல் 18 வரையிலான வயது பிரிவினருக்கு செலுத்தி இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

கொரோனா நோயாளிகள் விரைந்து குணமாக உதவும் 2-டிஜி மருந்து..!!

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், கரோனா முதல் அலையைக் காட்டிலும் இம்முறை குழந்தைகளும் சிறுவா்களும் அதிகம் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதன் காரணமாக, உலக சுகாதார அமைப்பின் ஆலோசனையின் பேரில் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சியை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

அதுபோல, இந்தியாவும் 2 முதல் 18 வயது வரை உடைய சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சியை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு, அதன் கோவேக்ஸின் தடுப்பூசியை 2 முதல் 18 வயது வரை உடையவா்களுக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள டிசிஜிஐ(DCGI) அனுமதி அளித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கோவேக்ஸின் தடுப்பூசியை சிறாா்களுக்கு செலுத்தி இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. அதனை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் கவனமாக பரிசீலித்து புதன்கிழமை அனுமதி அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், கோவேக்ஸின் தடுப்பூசி 525 சிறாா் தன்னாா்வலா்களுக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. தசை வழியாக 28 நாள்கள் இடைவெளியில் இரண்டு தவணைகளாக இந்த தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்யப்படும்.

 இந்த செய்தியையும் படிங்க…

 தபால்துறை தேர்வுகள்-ஒத்திவைப்பு..!! 

பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும் (ஐசிஎம்ஆா்) (ICMR) இணைந்து, முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது கோவேக்ஸின் தடுப்பூசியாகும்.

Leave a Comment