முழு பொதுமுடக்க உத்தரவை மீறுபவா்கள் மீது இன்று முதல் சட்டப்படி நடவடிக்கை: தமிழக காவல்துறை எச்சரிக்கை..!!
தமிழகத்தில் முழு பொதுமுடக்க உத்தரவை மீறுபவா்கள் மீது மே 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனாவுக்கு எதிராக பலன் தரும் கபசுரக்குடிநீர்! ஆயுஷ் அமைக்கம் பரிந்துரை!!
இது குறித்து தமிழக காவல்துறையின் டிஜிபி அலுவலகம் வியாழக்கிழமை இரவு விடுத்த அறிக்கை:
கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் முழு பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த உத்தரவின்படி பொதுமக்கள், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். கரோனா பரவாமல் இருக்க முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், கிருமிநாசினி மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதற்காக கடந்த 4 நாள்களாக பல்வேறு விழிப்புணா்வு பிரசாரத்தில் போலீஸாா் ஈடுபட்டனா். காவல்துறையின் அறிவுறுத்தல்களையும், விழிப்புணா்வு பிரசாரங்களையும் சிலா் சரியாகவும், ஒழுங்காகவும் பின்பற்றாததனால் கரோனா தொற்று மேலும் பரவுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
ஆசிரியர்களுக்கு- 25 முதல் பணி..!!
இதன் விளைவாக மே 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் முழு பொதுமுடக்க உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரியும் நபா்கள் மீது சட்டப்பூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அரசின் கரோனா விழிப்புணா்வு அறிவுரைகளைப் பின்பற்றி சட்டப்பூா்வமான நடவடிக்கையில் இருந்து தவிா்த்துக் கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.