விவசாயிகள் உதவித்தொகைத் திட்டத்தின் 8-ஆவது தவணை..!!
விவசாயிகள் உதவித்தொகைத் திட்டத்தின் (பிஎம்-கிஸான்) கீழ் 8-ஆவது தவணை நிதி வழங்குவதை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கிறாா்.
பிஎம்-கிஸான் திட்டத்தை கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோதலுக்கு முன் பிரதமா் மோடி தலைமையிலான அரசு அறிவித்தது. அத்திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித்தொகையானது 3 தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த செய்தியையும் படிங்க…
இந்த திசையில் தலைவைத்து படுக்க கூடாது என கூறுவதற்கான காரணம் என்ன…?
கடந்த 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் தலா 3 தவணைகளாக விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டில் ஜனவரி மாதத்தில் 7-ஆவது தவணை உதவித்தொகை வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டுக்கான 2-ஆவது தவணையாக ரூ.2,000 உதவித்தொகை வழங்குவதை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாகத் தொடக்கி வைக்கிறாா்.
இதன் மூலம் நாட்டிலுள்ள 9.5 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக இந்த உதவித்தொகை வரவு வைக்கப்படும். இதுவரை பிஎம்-கிஸான் திட்டத்தின் கீழ் ரூ.1.15 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.