தமிழ்நாட்டில் இன்று முதல் தீவிரமாகும்- கொரோனா வைரஸ் ஊரடங்கு கட்டுப்பாடுகள்: 10 முக்கிய தகவல்கள்..!!
தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கு விதிகளைக் கடுமையாக்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு. அதன்படி மே 15ஆம் தேதி முதல் புதிதாக பின்வரும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.
1. மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் நன்பகல் வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், இனிமேல் காலை பத்து மணி வரையே இயங்க அனுமதிக்கப்படும். பிற கடைகளைத் திறக்க அனுமதி கிடையாது.
2. டன்ஸோ போன்ற சேவைகள் காலை 6 மணி முதல் 10 மணிவரையே செயல்பட அனுமதிக்கப்படும்.
3. ஏடிஎம், பெட்ரோல் பங்குகள், ஆங்கில மருந்துக் கடைகள், நாட்டு மருந்துக் கடைகள் ஆகியவை எப்போதும் போல செயல்பட அனுமதி உண்டு.
4. பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கடைகளிலேயே பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். வெகுதூரம் செல்ல முயற்சிப்பவர்கள் தடுக்கப்படுவார்கள்.
5. காய்கறி, பூ, பழம் விற்கும் நடைபாதைக் கடைகளைத் திறக்க இனி அனுமதி இல்லை. தேநீர்க் கடைகளைத் திறக்கவும் அனுமதி இல்லை.
இந்த செய்தியையும் படிங்க…
பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவியிடம்- ஆணையர் பணியிடமாக மாற்றம்..!!
6. மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணிவரை செயல்படலாம்.
7. வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவோருக்கு இ – பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.
8. மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ளவும் இ – பதிவு கட்டாயமாக்கப்படுகிறது. 17ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
9. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு ஆகியவை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.
10. இறைச்சி, மீன் கடைகளில் கூட்டம் சேர்வதால் அவற்றைப் பரவலாக்க மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவு.
இந்தக் கட்டுப்பாடுகள் மே 24ஆம் தேதிவரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.