BE., B.Tech., ME.,M.Tech., அரியர், முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகள்: அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது..!!
பொறியியல் மாணவர்களின் அரியர் தேர்வு மற்றும் முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் -ஓராண்டுக்கு நிறுத்தம்..!!
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்திருக்க வேண்டிய செமஸ்டர் தேர்வுகளை, கரோனா பரவல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் தள்ளி வைத்தது. இதைத் தொடர்ந்து, செமஸ்டர் தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இணைய வழியில் நடத்தப்பட்டன. அதில், 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே பிஇ(BE.,), பிடெக்(B.Tech.,), மற்றும் எம்இ(ME.,), எம்டெக்(M.Tech.,) படிப்புகளில் 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி இணையதளத்தில் வெளியிட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் உள்ளதாகப் புகார்கள் எழுந்தன. அந்தத் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இருந்து அரியர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதேபோல முதலாமாண்டு மாணவர்களின் முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகளும் வெளியாகி உள்ளன.
இந்த செய்தியையும் படிங்க…
பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவியிடம்- ஆணையர் பணியிடமாக மாற்றம்..!!
தேர்வு முடிவுகளை https://aucoe.annauniv.edu/regular_result_nd2020/index.php என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கத்தில் காணலாம்.