பிளஸ்2(+2) தேர்வு நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது..!!
பிளஸ்2(+2) தேர்வு நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது : அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
பிளஸ்2(+2) பொது தேர்வு நடத்துவதில் அரசு உறுதியாக இருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கொரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ.2,000 ரேஷன் கடைகளில் வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் தொடங்கி வைத்தார்.
இந்த செய்தியையும் படிங்க…
பிளஸ் 2( 2) திருப்புதல் தேர்வு நடைமுறை- தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்..!!
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பிளஸ் 2(|+2) வகுப்பிற்கான பொது தேர்வு நிச்சயம் நடைபெறும். இதுகுறித்து கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்சிங் மூலம் கருத்து கேட்பு கூட்ட்ம் நடைபெற்று வருகிறது. அனைவருமே 12ம் வகுப்பு தேர்வு நிச்சயம் நடத்த வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து வருகின்றனர்.
தேர்வு நடத்துவதில் உறுதியாக இருக்கிறோம். ஒருவேளை அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள் என்ற அறிவிப்பை அரசு கொடுத்தால் மாணவர்களுக்கு வேண்டுமானால் அது மகிழ்ச்சியை தந்து அரசை பாராட்டலாம். ஆனால் அது எங்களுக்கு தேவை இல்லை. தேர்வு நடத்தி அதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெற்று மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து நல்ல கல்வியை பெற வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.