கொரோனா-தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வந்தால் அபராதம்..!!
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்தால் 2000 ரூபாய் அபராதம் என மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க…
காலையிலே இந்த பாலை குடிச்சா -கால் வலி வராது..!!
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமைப்படுத்துதலில் இருப்பவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் வெளியே வந்தால், அபராதம் விதிக்கப்பட்டு கொரோனா பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் முறை வெளியே வந்தால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் 2ம் முறை வெளியே வந்தால் பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அருகில் வசிப்பவர்கள் 044- 25384520 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.