BA .2 ஓமிக்ரான்" வகை மிகவும் ஆபத்தானது..?? - Tamil Crowd (Health Care)

BA .2 ஓமிக்ரான்” வகை மிகவும் ஆபத்தானது..??

 BA .2 ஓமிக்ரான்” வகை மிகவும் ஆபத்தானது..??

ஓமிக்ரான் வகை கொரோனா:

ஒரிஜினல் ஓமிக்ரானை காட்டிலும் ஸ்டெல்த் ஓமிக்ரான் வேகமாகப் பரவுவதாகத் தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், இதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளனர். கடந்த நவ. மாதம் முதல் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஓமிக்ரான் வகை கொரோனா காரணமாக வைரஸ் பாதிப்பு மளமளவென அதிகரிக்கத் தொடங்கியது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட இந்த ஓமிக்ரான் உலகெங்கும் அடுத்த அலையை ஏற்படுத்தியது. இது ஆல்பா, டெல்டா கொரோனா வகைகளைக் காட்டிலும் வேகமாக பரவியது. இதனால் தான் ஓமிக்ரான் குறுகிய காலத்திலேயே அதிகபட்ச நாடுகளுக்குப் பரவியது.

ஜப்பானிய அறிவியலாளர்கள் எச்சரிக்கை:

டெல்டா வைரசை விட BA. 2 வகை ஓமிக்ரான் தொற்று மிகவும் வீரியமானது என்று வெள்ளை எலிகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் ஜப்பானிய அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.

ஸ்டெல்த் ஓமிக்ரான் (BA.2):

அதாவது டெல்டா வைரசை விட BA. 2 வகை ஓமிக்ரான் வைரஸ் மிகவும் வீரியமானது என்று தெரிவித்துள்ளார்கள். மேலும் BA 2.ஓமிக்ரான் வகை வைரஸ் நுரையீரலை அதிகம் பாதிக்கும் தன்மை கொண்டது என்றும், தடுப்பூசி எதிர்ப்பு சக்தியையும் மீறி இத்தொற்று உடலை தாக்கக்கூடியது எனவும் தெரிவித்துள்ளார்கள். மேலும் இனி வரும் காலத்தில் BA. 2வகை ஓமிக்ரான் வைரசால் உலக மக்கள் பெருமளவில் பாதிப்பை சந்திப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.

சர்வதேச ஆய்வாளர்கள் எச்சரிக்கை: 

இதனிடையே இப்போது ஓமிக்ரான் கொரோனாவிலேயே ஸ்டெல்த் ஓமிக்ரான் எனப்படும் BA.2 ஒரு புதிய வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த BA.2 ஸ்டெல்த் ஓமிக்ரான் வேரியண்ட் பழைய ஓமிக்ரான் போலவே கடந்த சில வாரங்களில் டென்மார்க், பிலிப்பைன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. முந்தைய ஓமிக்ரான் வகையைக் காட்டிலும் இந்த ஸ்டெல்த் ஓமிக்ரானுக்கு சில வேறுபாடுகள் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பரவும் வேகம் மிக அதிகம்:

அதாவது இந்த புதிய ஸ்டெல்த் ஓமிக்ரான் ஒரிஜினல் ஓமிக்ரானை போல பல பிறழ்வுகளைக் கொண்டிருந்தாலும், அதிலிருந்து சில பிறழ்வுகள் மிஸ் ஆகியுள்ளதாக டாக்டர் எம்மா ஹாட்கிராஃப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், சில ஆய்வுகளில் இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான் ஒரிஜினல் ஓமிக்ரானை விட வேகமாகப் பரவலாம் என்றும் வேக்சின் ஆண்டிபாடிகளிடம் தப்பி அவர்களையும் இந்த ஓமிக்ரான் வகை தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வேக்சின் தடுப்பாற்றல் குறைகிறது:

 வூஹானில் கண்டறியப்பட்ட கொரோனா உடன் ஒப்பிடுகையில், பூஸ்டர் டோஸ் வேக்சின் போடப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர், இந்த BA.1 மற்றும் BA.2 ஓமிக்ரானுக்கு எதிரான வேக்சின் தடுப்பாற்றல் முறையே 6.1 மடங்கு மற்றும் 8.4 மடங்கு மட்டுமே குறைகிறது. ஒரிஜினல் ஓமிக்ரான் வகை உடன் ஒப்பிடுகையில் ஸ்டெல்த் ஓமிக்ரானுக்கு எதிரான வேக்சின் தடுப்பாற்றல் 1.4 மடங்கு குறைகிறது. அதேநேரம் ஒரிஜினல் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் தோன்றும் ஆன்டிபாடிகள் ஸ்டெல்த் ஓமிக்ரானை தடுப்பதிலும் பலன் அளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டெல்த் ஓமிக்ரான் வேகமாகப் பரவ காரணம்:

மற்றொரு ஆய்வில் 19 வகையான ஆண்டி பாடிகளைக் கொண்டு ஆய்வாளர்கள் சோதனை செய்தனர். அதில் 17 வகையான ஆன்டிபாடிகளை இரண்டு வகை ஓமிக்ரானும் முழுமையாக எதிர்கிறது. சில வகை ஆன்டிபாடிகளை ஒரிஜினல் ஓமிக்ரானை காட்டிலும் இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான் அதிகம் எதிர்கிறது. இது கூட அந்த ஸ்டெல்த் ஓமிக்ரான் வேகமாகப் பரவ காரணமாக இருக்கலாம். மேலும், 2 டோஸ் வேக்சின் போட்டவர்கள் மத்தியிலும் சரி, வேக்சின் போடாதவர்கள் மத்தியிலும் சரி ஸ்டெல்த் ஓமிக்ரான் பரவல் அதிகமாகவே உள்ளதை டென்மார்க் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 பரவல் வேகத்தை இது அதிகரிப்பதில்லை:

வேக்சின் போடாதவர்கள் மத்தியில் தான் இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான் பரவல் அதிகமாக உள்ளது. அதேநேரம் வேக்சின் போட்டவர்கள் மத்தியில் இரு ஓமிக்ரான் பரவலுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் பெரியளவில் இல்லை. இந்த ஆய்வுகள் மூலம் ஸ்டெல்த் ஓமிக்ரான் ஒரிஜினல் ஓமிக்ரானை விட வேகமாகப் பரவுவது தெரிகிறது. வேக்சின் தரும் தடுப்பாற்றலில் இருந்தும் இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான் எளிதாகத் தப்பினால் கூட வைரஸ் பரவல் வேகத்தை இது அதிகரிப்பதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

 ஆய்வாளர்கள் தெரிவிப்பு: 

ஒரிஜினல் ஓமிக்ரான் உடன் ஒப்பிடுகையில் இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான் மனித நாசியில் உள்ள எபிடெலியல் செல்களில் வேகமாகப் பரவும் திறனைக் கொண்டு இருக்கிறது. இதனால் உயிரணுக்களுடன் இணைக்கும் திறனும் அதிகமாக உள்ளது. இது குறித்து எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனையிலும் கூட ஸ்டெல்த் ஓமிக்ரான் வேகமாக பரவுவதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இவை தவிர BA.3 என்ற புது வகை ஓமிக்ரானையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மொத்தம் 33 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. அதில் 31 பிறழ்வுகள் BA.1 ஓமிக்ரானிலும் 2 பிறழ்வுகள் BA.2 ஓமிக்ரானிலும் உள்ளதாகவும் இது வேகமாகப் பரவுவதில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment