ஊரடங்கு விதிகள்- மேலும் தீவிரம்..!!
ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டதை அடுத்து, காலை 10:00 மணி முதல் சரக எல்லைக்கு வெளியே செல்ல, ‘இ- பதிவு’ அவசியம் என சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அமலில் உள்ள ஊரடங்கு விதிமுறைகள் மேலும் தீவிரப்படுத்தப்படுகின்றன.
இந்த செய்தியையும் படிங்க…
மிளகை இந்த முறையில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் !!
சென்னை பெருநகரில் உள்ள, 12 காவல் மாவட்ட எல்லைகளில், 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காவல் நிலைய சரகங்களில், உரிய சாலை தடுப்புகள் அமைத்து, செக்டார்கள் ஏற்படுத்தி, அப்பகுதியில் வசிக்கும் மக்கள், வேண்டிய காய்கறி, மளிகை பொருட்களை அங்கேயே வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதல் படி, காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவர்.
சென்னையின் அனைத்து காவல் நிலைய சரகங்களையும் ஒருங்கிணைத்து, முக்கிய சந்திப்புகள், சரக எல்லைகள் என, 153 வாகன தணிக்கை சாவடிகள், 348 செக்டார்கள் உருவாக்கப்பட்டு, காவல் குழுவினரால் கண்காணிக்கப் படுகிறது.அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி வெளியே வருவோர், ‘இ – பதிவு’ செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். இ- பதிவு இல்லாமல் வெளியே வருவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.பொதுமக்கள் வசிக்கும் சரகத்திலிருந்து, மறு காவல் நிலைய எல்லைக்குள் செல்லாதவாறு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
உப்பை கொண்டு இந்த பரிகாரம் செய்வதால் என்ன பலன்கள் தெரியுமா…?
மறு காவல் எல்லைக்கு செல்பவர்கள் உரிய, இ – பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் தவிர்க்க முடியாத தேவைகளை தவிர, மற்ற எந்த நடவடிக்கைக்கும், இ- பதிவு இல்லாமல் அனுமதி இல்லை.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.